அரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்க போகும் இந்தியா... ஜெயிச்ச கையோடு மோடி செய்ய போற அதிரடி இதுதான்...

உலகின் பல்வேறு நாடுகளும், தங்களது பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) தேவைகளுக்கு, இறக்குமதியைதான் நம்பியுள்ளன. இதில், இந்தியாவும் (India) ஒன்று. சவுதி அரேபியா (Saudi Arabia), யுஏஇ (UAE), ஈராக் (Iraq), ரஷ்யா (Russia) மற்றும் அமெரிக்கா (US) உள்பட பல்வேறு நாடுகளிடம் இருந்தும், பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை (Crude Oil) இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதற்காக மிகப்பெரிய தொகையை இந்தியா செலவிட்டு கொண்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் (Economy) கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆசைப்படுகிறது. இதற்காக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பவர்களின் நிதின் கட்கரி (Nitin Gadkari) முக்கியமானவர்.

Modi

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக உள்ள நிதின் கட்கரி, எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாறியாக வேண்டியதன் அவசியத்தை நீண்ட காலமாக பேசி வருகிறார். இந்த வரிசையில் தற்போது மிக முக்கியமான தகவல் ஒன்றை அவர் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதின் கட்கரி கூறுகையில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள், இந்தியாவில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை வெளியேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்கள் என பேட்டரி மூலம் இயங்க கூடிய நிறைய வாகனங்கள் வந்து விட்டன.

Petrol Bunk

நீங்கள் டீசலுக்கு 100 ரூபாய் செலவு செய்கிறீர்கள் என்றால், இந்த வாகனங்கள் மின்சாரத்திற்காக உங்களை வெறும் 4 ரூபாயை மட்டுமே செலவு செய்ய வைக்கும்'' என்றார். இந்தியாவில் தற்போது லோக்சபா தேர்தல் (Lok Sabha Elections) நடைபெற்று முடிந்துள்ளது. இதன் முடிவுகள் (Results) நாளை வெளியாகவுள்ளன.

இந்த முடிவுகள் பெரும்பாலும் பாஜகவிற்கு (BJP) சாதகமாக வரலாம் என்றுதான் பல்வேறு கருத்து கணிப்புகளும் கூறியுள்ளன. எனவே பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீதான பிடி படிப்படியாக இறுகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியில் நிதின் கட்கரி கூறியதை போல், அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது வரும் 2034ம் ஆண்டில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படலாம். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? என்பது நாளைதான் நமக்கு தெரியவரும். ஒரு வேளை காங்கிரஸ் (Congress) தலைமையிலான அரசு அமைந்தாலும் கூட, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் என்றுதான் நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற அம்சமும் அடங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 23:47 [IST]
English summary
Sales of new petrol and diesel vehicles to end in india by 2034
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+