ஷோரூமிற்குள் சூப்பர் காரை மோதிய சேல்ஸ்மேன்... ஜீரணிக்க முடியாத காரணம்!!
அமெரிக்காவின், வடக்கு கரோலினா பகுதியில் செயல்பட்டு வரும் செவர்லே டீலர்ஷிப்பில், வாடிக்கையாளர் ஒருவருக்காக கஸ்டமைஸ் அம்சங்களுடன் கூடிய ஒரு கார்வெட் சூப்பர் கார் டெலிவிரிக்காக கொண்டு வரப்பட்டது.
அப்போது, விற்பனை பிரதிநிதி ஒருவர் அந்த காரை ஷோரூமிற்குள் காட்சிக்கு வைப்பதற்காக எடுத்துள்ளார். எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, ஷோரூமின் பெரிய கண்ணாடி ஜன்னல்களில் மோதி விபத்துக்குள்ளானது.

விசேஷமான மாடல்
விபத்துக்குள்ளான மாடல் செவர்லே கார்வெட் இசட்06 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல கஸ்டமைஸ் அம்சங்களுடந் அந்த கார் தயாரிக்கப்பட்டு டெலிவிரி கொடுக்க தயார் நிலையில் இருந்தது.

சேல்ஸ்மேன் சொன்ன காரணம்
க்ளட்ச் பெடலுக்கும், பிரேக் பெடலுக்கும் வித்தியாசம் தெரியாததால், கார் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக அந்த காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விற்பனை பிரதிநிதி கூறியிருக்கிறார்.

சேதம்
கார் மோதிய வேகத்தில் அந்த ஷோரூமின் முன்பக்கத்தில் இருந்த பெரிய கண்ணாடிகள் சேதமடைந்தது. காரின் முன்பகுதியிலும் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து, அந்த ஷோரூமை சேர்ந்த சர்வீஸ் எஞ்சினியர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

விலை மதிப்பு
விபத்தில் சிக்கிய செவர்லே கார்வெட் இசட்06 கார் 95,830 டாலர்கள் விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் மாடல்
விபத்தில் சிக்கிய கார்வெட் காரில் 650 பிஎச்பி பவரையும், 881 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கக்கூடிய 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த கார் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் கிடைக்கிறது.

செயல்திறன்
விபத்தில் சிக்கிய கார்வெட் கார் 0- 97 கிமீ வேகத்தை 2.95 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 321 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.
Images Via- Jalopnik


Click it and Unblock the Notifications