1970களில் சினிமா உலகை ஆட்டி படைத்த நடிகரா இது! வயசான காலத்துல சொகுசா போக ரெண்டே கால் கோடி ரூபா கார்!

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் கூட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த பலரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான வாடிக்கையாளர்களாக உள்ளனர். திரையுலகினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை S-Class S 350d மற்றும் S-Class S450 4Matic ஆகியவை ஆகும். இதில், S-Class S450 4Matic காரை பிரபல நடிகர் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் சலீம் கான் (Salim Khan) ஆவார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் (Salman Khan) தந்தை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Salim Khan Buys Mercedes Benz S-Class

அத்துடன் இவருக்கு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் போன்ற இன்னும் வேறு சில முகங்களும் உள்ளன. 89 வயதாகும் இவர் கடந்த 1959ம் ஆண்டில் இருந்து பாலிவுட் திரையுலகிற்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். இருப்பினும் 1970களில் அவர் புகழின் உச்சத்தில் இருந்தார்.

தற்போது அவர் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் காரின் விலை 1.90 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமாராக 2.25 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.

Mercedes Benz S-Class

இவ்வளவு விலை உயர்ந்த காரை சலீம் கான் பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சலிம் கானின் இந்த புதிய கார், கடந்த ஜனவரி 29ம் தேதிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்த காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே சவாலான நிலப்பரப்புகளிலும் எளிமையாக பயணம் செய்ய முடியும்.

இந்த காரில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 2 வயர்லெஸ் செல்போன் சார்ஜர்கள், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 10 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சலீம் கான் தற்போது முதுமையின் பிடியில் இருந்து வருகிறார். இந்த சமயத்தில் அவரது சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் கார் உறுதி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 17:41 [IST]
English summary
Salim khan buys mercedes benz s class worth rs 2 25 crore viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+