இப்போதும் இளமையாக திரியும் பிரபல 90ஸ் பாடகர்! புதுசா வாங்கிய காரை பற்றி தான் பார்த்தவங்க எல்லாரும் பேச்சு

பாலிவுட் (Bollywood) சினிமா நட்சத்திரங்கள் என்றாலே அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்கி குவிப்பர் என்பதை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்தியாவில் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகுவதற்கு இந்தி சினிமாக்காரர்களும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில், பிரபல இந்தி பாடகர் ஒருவர் சமீபத்தில் வாங்கிய விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) எலக்ட்ரிக் காரில் காட்சி தந்துள்ளார். யார் அவர்? என்பதையும், அவர் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்வதில் தீவிரமாக உள்ள கார் நிறுவனங்களுள் பிஎம்டபிள்யூ ஒன்றாகும். தற்சமயம் மொத்தம் 5 விதமான எலக்ட்ரிக் கார்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், பிஎம்டபிள்யூ ஐ7 (i7) எலக்ட்ரிக் கார் ஆகும்.

salim merchant spotted in bmw

இந்த பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் காரை தான் பிரபல இந்தி பாடகர் ஒருவர் சமீபத்தில் வாங்கியுள்ளார். அவரது பெயர், சலீம் மெர்ச்சன்ட் (Salim Merchant) ஆகும். கடந்த மார்ச் 3ஆம் தேதி தனது 51வது பிறந்த நாளின்போது சலீம் மெர்ச்சண்ட் நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்துள்ளார். அப்போது அவர் தனது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் காரில் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்.

சலீம் மெர்ச்சண்ட் தனது சகோதரர் சுலைமான் மெர்ச்சண்ட் உடன் பாடல்களை பாடி கவனத்தை பெற்றவர் ஆவார். சலீம்- சுலைமான் சகோதரர்கள் பாடகர்களாக இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக உள்ளனர். இதில், சலீம் மெர்சண்ட் தனது 19ஆம் வயதில் பாடகராக சினிமா பயணத்தை துவங்கினார்.

salim merchant spotted in bmw

பின்னர் காலத்தில், பாடல்களை பாடுவது மட்டுமில்லாமல், கீபோர்டு, பியானோ, ஹார்மோனியம் மற்றும் டபுலா போன்ற இசை கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டு அதில் சலீம் மெர்ச்சண்ட் நிபுணத்துவம் பெற ஆரம்பித்தார். இவ்வாறு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொடர்ச்சியாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட சலீம் மெர்ச்சண்ட் தனது 51வது பிறந்த நாளை மும்பையின் பந்த்ரா பகுதியில் பிரம்மாண்டமான இசை கச்சேரி உடன் கொண்டாடி உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு அடர் நீல நிறத்திலான பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் காரில் சலீம் மெர்ச்சண்ட் வந்திறங்கியது பார்ப்போரை கவர்ந்தது. குறிப்பாக, பளபளப்பான அவரது பிராண்ட்-நியூ ஐ7 கார் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஐ7 ஆனது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தாழ்வான செடான் ரக எலக்ட்ரிக் கார் ஆகும்.

salim merchant spotted in bmw

இ-டிரைவ்50 எம் ஸ்போர்ட், எக்ஸ்-டிரைவ்60 எம் ஸ்போர்ட், எம்70 எக்ஸ்-டிரைவ் என 3 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.03 கோடியில் இருந்து ரூ.2.50 கோடி வரையில் தற்சமயம் உள்ளன. இந்தியாவில் விற்பனையில் இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காருக்கு போர்ஷே டைகன் போட்டியாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செல்வந்தர்கள் மத்தியில் பிரபலமானதாக விளங்கும் பிஎம்டபிள்யூ ஐ7 காரில் சமீபத்தில் நடிகர் சூர்யா- ஜோதிகா குடும்பம் காட்சி தந்திருந்தது. இவ்வாறு, சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பிரபலமாக விளங்கும் ஐ7 எலக்ட்ரிக் காரை இந்தியாவின் பிரபலமான பாடர்களுள் ஒருவரான சலீம் மெர்ச்சண்ட் வாங்கியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2025, 12:19 [IST]
English summary
Salim merchant spotted in his brand new bmw i7 electric car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X