4 கோடி ரூபாய் லக்சரி காரில் வந்து இறங்கியது பிரபல நடிகர் அவரா!! ஏர்போர்ட் கொஞ்ச நேரத்துல பரபரப்பு ஆயிடுச்சு!

சல்மான் கான் (Salman Khan), பாலிவுட்டின் முன்னணி நடிகர். இந்தியா முழுவதும் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள சல்மான் கான் புதியதாக ரூ.4.4 கோடி மதிப்பில் ஒரு ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை வாங்கி உள்ளார். இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் சிறப்பான வரவேற்பு உள்ளது. ஏனெனில், நீண்ட காலமாக விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று ரேஞ்ச் ரோவர் ஆகும். இதனாலேயே, விஐபி-கள் பலர் ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு உரிமையாளர்களாக உள்ளனர். இந்த வரிசையில், முன்னணி பாலிவுட் நடிகர் சல்மான் கான் புதியதாக ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரை வாங்கி உள்ளார்.

salman khan in range rover

ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆனது நீளமான மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்ட லக்சரி எஸ்யூவி கார் ஆகும். இந்த கார் பார்ப்பதற்கு எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளதோ, அதே அளவிற்கு விலைமிக்கது ஆகும். ரேஞ்ச் ரோவர் எஸ்வி லாங்-வீல்பேஸ் காரின் விலை ரூ.4.4 கோடி என்ற அளவில் உள்ளது. இவ்வளவு விலை கொண்ட காராக இருப்பினும், இதனை வாங்குவது நடிகர் சல்மான் கானுக்கு ஒன்றும் பெரிய விஷயமல்ல.

சல்மான் கான் இந்த காரில் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், நடிகர் சல்மான் கானின் ரேஞ்ச் ரோவர் கார் நன்கு பளபளப்பான தோற்றத்தில் இருப்பதை காணலாம். சல்மான் கான் முக்கியமான இடங்களுக்கு செல்லும்போது, கூடவே பாதுகாப்பு வீரர்களையும் அழைத்து செல்வது வழக்கம்.

இந்த வகையில், மும்பை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் சல்மான் கானின் ரேஞ்ச் ரோவர் காருக்கு முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பு வீரர்களின் வாகனங்கள் செல்வதை காணலாம். சூழலை சரிப்பார்த்த பின், இந்த பாதுகாப்பு வீரர்களுள் ஒருவர் வந்து காரின் கதவை திறந்தால் மட்டுமே சல்மான் கான் வெளியே வருவார். தற்போது மும்பை விமான நிலையத்திலும் அவ்வாறுதான் நடந்தது.

விமான நிலையத்துக்குள் நுழைந்த சல்மான் கான் அங்கு பிரபல மராட்டிய அரசியல்வாதி ஒருவரை அவரது மகனுடன் சந்தித்து பேசினார். நடிகர் சல்மான் கான் வைத்திருப்பது நியூ-ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார் ஆகும். அதாவது, இதனை சமீபத்தில்தான் சல்மான் கான் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரின் எந்த வேரியண்ட்டை சல்மான் கான் வாங்கியுள்ளார் என்கிற விபரம் கிடைக்க பெறவில்லை.

salman khan in range rover

ரேஞ்ச் ரோவர் எஸ்வி லாங்-வீல்பேஸ் கார்களில் 3.0 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 503 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த ஹைப்ரீட் என்ஜின் உள்ளது. நடிகர் சல்மான் கான் இந்த புதிய ரேஞ்ச் ரோவர் காரை போர்டோஃபினோ நீலம் என்கிற பெயிண்ட் ஆப்ஷனில் வாங்கியுள்ளார்.

ரேஞ்ச் ரோவர் நிறுவனம் அதன் எஸ்வி கார்களில் பிரத்யேகமான க்ரில் மற்றும் பம்பரை முகப்பு பகுதியில் வழங்குகிறது. இவற்றை சல்மான் கானின் காரிலும் காண முடிகிறது. இவற்றுடன், டிஜிட்டல் எல்இடி ஹெட்லைட்ஸ், 22-இன்ச் டைமண்ட்-டர்ண்டு ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்கள், 4-ஸோண் க்ளைமேட் கண்ட்ரோல், முன் இருக்கைகளுக்கு இடையே குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றையும் ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார் பெறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்த ரேஞ்ச் ரோவர் காரின் விலை அதிகமாக இருப்பினும் இந்தியாவின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானுக்கு இவ்வாறான ஒரு சொகுசு காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. ஆனால், இன்னமும் பாதுகாப்புக்கு வீரர்களை அழைத்து செல்ல வேண்டிய நிலைமை நடிகர் சல்மான் கானுக்கு இருப்பதை நினைத்தால்தான் சற்று மனவருத்தமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 29, 2024, 12:38 [IST]
English summary
Salman khan arrives mumbai airport in his new range rover sv luxury car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+