1.40 கோடி ரூபா காரை வாங்கிய சல்மான் கானின் பாதுகாவலர்! அவரோட மாச சம்பளமே இவ்வளவு ரூபாயா!

நடிகர்கள் வெளியே வரும்போது அவர்களது குடும்பத்தினர் கூட வராங்களோ, இல்லையோ, ஆனால் அவர்களுடன் கட்டாயம் ஒரு பாதுகாவலராவது வருவார்கள். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பிரபலங்களை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்வதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. இவர்கள், அன்பை வெளிக்காட்ட வரும் ரசிகர்களிடம் இருந்து மட்டுமல்ல, பிரபலங்களை அவர்களின் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதும் பாடிகுவார்டுகளின் பணியாகும். இதனால்தான் பாடிகுவார்டுகளுக்கு பிரபலங்கள் மிக அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றனர். அப்படியாக பாலிவுட் நடிகர் சல்மானின் பாதுகாப்பில் முக்கிய பங்கினை வகிப்பவராக இருக்கின்றார் ஷெரா என்பவர்.

இவர் சல்மான் கானின் பாடிகுவார்டாக கடந்த 29 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய ஓர் நபரே தற்போது தன்னுடைய வீட்டிற்கு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport) கார் மாடலையே அவர் வாங்கியிருக்கின்றார்.

Salman khan bodyguard buys luxury car

இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்திய திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் பிரியமான கார் மாடலாக இது இருக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலே தற்போது சல்மான் கானின் பாதுகாவலரையும் கவர்ந்த கார் மாடலாக மாறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இவர் சல்மானுக்கும், அவருடைய குடும்பத்தினரின் பாதுகாப்பிலும் கடந்த 1995 ஆம் ஆண்டில் இருந்தே ஈடுபட்டு வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இவருக்கு சம்பளமாக மாதம் ஒன்றிற்கே ரூ. 15 லட்சம் வழங்குவதாகக் கூறப்படுகின்றது. இதன்படி பார்த்தால் ஆண்டு ஒன்றிற்கு அவர் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார் என தெரிகின்றது.

Shera buys range rover sport

மேலும், இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் பாடிகுவார்டாகவும் ஷெரா காட்சியளிக்கின்றார். இத்தகைய நபரே தற்போது ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் சொகுசு காரை வாங்கி அசத்தியுள்ளார். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே இந்தியாவில் ரூ. 1.40 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

இத்தகைய அதிக விலையைக் கொண்டிருந்தாலும் இந்த கார் இந்திய செல்வந்தர்களைக் கவர ஒரு போதும் தவறியதில்லை. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவில் பல முன்னணி பிரபலங்கள் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த காருக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகம் என்பதாலேயே இந்த காரின் உற்பத்தியை லேண்ட் ரோவர் நிறுவனம் உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது.

இந்தியாவில் வைத்து தயார் செய்யப்படும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார் மாடலின் டெலிவரி பணிகளே இந்த மாதத்தின் மத்தியில் தொடங்கியது. சொகுசு அம்சங்களையும், அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும் மிக தாராளமாகக் கொண்டிருக்கும் ஓர் கார் மாடலே இது ஆகும்.

இந்த கார் மாடலில் 2 விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 3.0 லிட்டர் பெட்ரோல் டைனமிக் எஸ்இ மற்றும் 3.0 லிட்டர் டீசல் டைனமிக் எஸ்இ ஆகியவையே அவை ஆகும். ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மிகவும் கவர்ச்சியான கார் மாடல் ஆகும்.

பெரிய வீல்கள், டோருடன் டோராக இருக்கக் கூடிய ஃப்ளஷ் வகை கைப் பிடிகள், டிஆர்எல் உடன் கூடிய ஹெட்லைட் ஆகியவையே இந்த சொகுசு காருக்கு அதிக அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இதேபோல், அட்வான்ஸ்டு அம்சங்களையும் இந்த கார் மிக தாராளமாக தாங்கியிருக்கின்றது.

அந்தவகையில், பிவி ப்ரோ ஓஎஸ் அம்சம் கொண்ட 13.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் திரை, பின் இருக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு திரை, மெரிடியன் சரவுண்டு சவுண்டு சிஸ்டம், ஏர் ப்யூரிஃபிகேஷன் கருவி மற்றும் அதிக சொகுசான இருக்கை மசாஜ் வசதியுடன் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இத்தகைய தரமான காரையே சல்மான் கானின் பாடிகுவார்டு தற்போது வாங்கி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக ரேஞ்ஜ் ரோவஸ் ஸ்போர்ட் காட்சியளிக்கின்றது. இந்திய திரைத்துறையினர் மட்டுமல்ல சில பணக்கார அரசியல்வாதிகளும் இந்த கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய அதிகம் டிமாண்டைக் கொண்ட சொகுசு காரையே தற்போது சல்மானின் பாடிகுவார்டு வாங்கி இருக்கின்றார்.

ஷெரா, சல்மான் கானின் பாடிகுவார்டாக மட்டுமே இல்லைங்க. அவர் 'டைகர் செக்யூரிட்டி' எனும் ஏஜென்சியையும் நடத்தி வருகின்றார். இதன் வாயிலாக பிரபலங்களுக்கான பாதுகாப்பு சேவையை அவர் வழங்கி வருகின்றார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஜஸ்டின் பைபர்-கூட இவரின் இந்த சேவையையே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இவர் சிவ சேனா கட்சியிலும் முக்கிய பொருப்பினை வகிக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2024, 5:00 [IST]
English summary
Salman khan bodyguard shera acquires rs 1 40 crore range rover sport
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+