புல்லட் ப்ரூஃப் கார் இல்லனா குடும்பத்துல யாருமே வெளிய வர மாட்டாங்க! அம்பானிக்கே இந்தளவு பாதுகாப்பு இருக்காது!
இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு எல்லாம் சலிம் கானை (Salim Khan), பாலிவுட் நடிகர் சல்மான் கானின் (Salman Khan) அப்பாவாக மட்டுமே தெரியும். ஆனால் இவருக்கு நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு முகங்கள் உள்ளன. இந்தியாவின் பிரபலமான மனிதர்களில் ஒருவரான சலிம் கானின் உயிருக்கு தற்போது தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. சல்மான் கானை போலவே, அவரது தந்தை சலிம் கானும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார். இதன் காரணமாக சல்மான் கானின் புல்லட் ப்ரூஃப் கார்களை சலிம் கான் பயன்படுத்தி வருகிறார்.
அவர் பயன்படுத்தும் சல்மான் கானின் புல்லட் ப்ரூஃப் கார்களில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) காரும் ஒன்றாகும். இந்த காரில் ஏறி சலிம் கான் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில் சலிம் கான் கைத்தாங்கலாக வந்து, புல்லட் ப்ரூஃப் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் ஏறி பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த புல்லட் ப்ரூஃப் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 398 பிஎஸ் பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 2.60 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3.25 கோடி ரூபாய் வரை வரும். ஆனால் இது புல்லட் ப்ரூஃப் வசதி கொண்ட கார் என்பதால், விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் புல்லட் ப்ரூஃப் வசதியுடன் இருக்கும் நிலையில், புதியதாக ஒரு நிஸான் பேட்ரல் (Nissan Patrol) காரை புல்லட் ப்ரூஃப் வசதியுடன் வாங்க சல்மான் கான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த காருக்கு சல்மான் கான் ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், விரைவில் டெலிவரி செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை, சல்மான் கானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்தும் வருகின்றன. எனவே புல்லட் ப்ரூஃப் நிஸான் பேட்ரல் காருக்கு சல்மான் கான் ஆர்டர் கொடுத்துள்ளாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. இது குறித்த உறுதியான தகவல்கள் கூடிய விரைவில் நமக்கு தெரியவரலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சல்மான் கான், அவரது தந்தை சலிம் கான் ஆகியோருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது உண்மை. எனவே அவர்களது குடும்பத்தினருக்கு இது போன்ற புல்லட் ப்ரூஃப் வசதி கொண்ட கார்கள் மிகவும் அவசியம் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








