முஸ்லீமா இருந்தாலும் கார் டயருக்கு எலுமிச்சம் பழம்லாம் வெச்சு பூஜை போட்டது அவரா! இதுக்குலாம் பெரிய மனசு வேணும்
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் சலீம் கான் (Salim Khan). நடிகர் என்பதை கடந்து, திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. இன்னும் இவர் யாரென்று தெரியாதவர்களுக்காக மட்டும் ஒரு சிறிய அறிமுகம். இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான் கானின் (Salman Khan) தந்தை ஆவார். 88 வயதாகும் சலிம் கான் தற்போது, புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) கார் ஆகும்.
இந்து பாரம்பரிய முறைப்படி, அந்த காருக்கு பூஜை எல்லாம் போடப்பட்டுள்ளது. அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. சலிம் கான் அடிப்படையில் ஒரு முஸ்லீம் ஆவார். ஆனால் அவர் மனைவி சுஷிலா சரக் (Sushila Charak) என்கிற சல்மா கான் (Salma Khan) ஒரு இந்து ஆவார்.

சலீம் கான் தற்போது வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் மிகவும் விலை உயர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 1.32 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.37 கோடி ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 381 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும்.

இதன் பவர் அவுட்புட் 367 பிஎஸ் பவர் மற்றும் 750 என்எம் டார்க் திறன் ஆக இருக்கிறது. இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின்களுடனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கரடு முரடான சாலைகளையும் இந்த கார் எளிதாக கடக்கும்.
12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 5 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், 13 ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் 3டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் (Features) ஆகும்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) போன்ற கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. இது ஒரு 7 சீட்டர் கார் ஆகும். எனவே சொகுசு வசதிகளுடன் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய கோடீஸ்வரர்களுக்கு இது மிகவும் ஏற்றது.


Click it and Unblock the Notifications








