கேத்ரீனாவுக்கு ஆடி கார் பரிசளித்த சல்மான்கான்: மீண்டும் நெருக்கம்?
நடிகை கேத்ரீனாவின் பிறந்த நாளுக்கு ஆடி எஸ்யூவி காரை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார் சல்மான்கான். பாலிவுட் வட்டாரத்தில் இந்த செய்திதான் சமீபத்திய பரபரப்பாக இருக்கிறது.
சல்மான்கான் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ஏக்தா டைகர் படத்தில் ஜோடியாக கேத்ரீனா கைஃப் நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையில் காதலர்களாக இருந்த இருவரும் பிரிந்துவிட்டாலும் தொடர்ந்து 'நல்ல நண்பர்களாக' இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது அன்புக்குரியவர்களுக்கு அவ்வப்போது பெரும் பரிசுப் பொருளை திடீரென கொடுத்து அசத்துவதை வழக்கமாக கொண்டிருக்கும் சல்மான்கான் கேத்ரீனாவுக்கும் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். ஆடி நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த ஆடி க்யூ3 எஸ்யூவியை அவர் கேத்ரீனாவுக்கு பரிசாக கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் நடந்த நடிகர் ராஜேஷ் கண்ணா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள இந்த புதிய காரில்தான் கேத்ரீனா வந்து இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேத்ரீனாவிடம் ஏற்கனவே ஆடி க்யூ7 எஸ்யூவி கார் இருக்கிறது.
இந்த நிலையில், சல்மான்கான் கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள புதிய ஆடி க்யூ3 கார் க்யூ7 காரைவிட அடக்கமான வடிவமைப்பை கொண்டிருக்கும். நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏதுவாக இந்த காரை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஆடி.
மேலும், அறிமுகம் செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் 500 கார்களும் புக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இந்த காரில் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன.
இந்த புதிய எஸ்யூவியை ரூ.26.31 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது ஆடி நிறுவனம்.


Click it and Unblock the Notifications








