சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சல்மான் கான் செய்த காரியம்..!!

சல்மான் தனது தொண்டு நிறுவனம் சார்பில் புதிய மாடல் சைக்கிள்களை அறிமுகப்படுத்தினார்.

By Azhagar

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடிகர் சல்மான் கான் தனது ’பீயிங் ஹீயுமன்’ (Being Human) தொண்டு நிறுவனத்தின் சார்பில் நான்கு மாடல் மின்சார சைக்கிள்களை விற்பனைக்காக அறிமுகப்படுத்தினார்.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

பாலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சல்மான் கான். பல புகழுக்கு சொந்தகாரான இவர் பல சர்சைகளிலும் சிக்கியுள்ளார்.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

1998ம் ஆண்டில் இரண்டு அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த அவர், 2016ம் ஆண்டில் அதற்காக நடைபெற்று வந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

மேலும் 2002ம் ஆண்டில் மும்பை பாந்திரா பகுதியில் சல்மான் ஓட்டிய கார் விபத்தாகி அதில் ஒருவர் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இப்படி தொடர்ந்து தேசியளவில் பரபரப்பான பல வழக்குகள் சல்மான் கானை பின் தொடர்ந்து வந்தன.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

இதுபோன்ற சூழ்நிலைகலை சமாளிக்க அவர் நிறுவிய அமைப்பு தான் ’பீயிங் ஹியூமன்’ தொண்டு நிறுவனம்.

2007ம் ஆண்டில் சல்மான் தொடங்கிய இந்த தொண்டு நிறுவனம், ஆதரவற்றோருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகதாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

பீயிங் ஹீயுமன் அமைப்பிற்கு தேசிய அளவில் மிகப்பெரிய வரவேற்பும் உள்ளது. இருந்தாலும் இதனை இன்னும் மக்களிடம் பிரபலப்படுத்த சல்மான் கான் உட்பட அந்த அமைப்பின் செயல்பாட்டாளர்களால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

இதில் சமீபத்திய நிகழ்வாக நேற்று பீயிங் ஹியூமன் அமைப்பினரால் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது பேட்டரிகளை கொண்டு மின்சாரத்தால் இயங்கும் இ-சைக்கிள்களை சல்மான் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

மேலும் அந்த சைக்கிளில் சுமார் 1.4 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் மேற்கொண்டு சல்மான் கான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

மும்பை மெகபூப் கலையரங்கத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் சல்மான் கானுடன் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டுவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான ரெஹான் பூஞ்சா பங்கேற்றார்.

சிறப்பு அழைப்பராக இல்லாமல், மொத்த நிகழ்ச்சிகளையும் ரெஹான் பூஞ்சா தொகுத்து வழங்கவும் செய்தார். மேலும் சல்மான் கானின் சகோதரர்கள் உட்பட அவரது குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர்.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

பீயிங் ஹியூமன் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சைக்கிள்கள் மூன்று மாடல்களில் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. இ-சைக்கிள், பி.எச்.27 மற்றும் பி.எச்.12 என்ற பெயரில் வெளியான இந்த மூன்று மாடல்களும் வெள்ளை, மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளன.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

நகரப்புறங்களின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இ-சைக்கிள்கள் பெரியளவில் உதவும் என்பதால், அவற்றை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி அமைந்தது.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

சல்மான் கான் வெளியிட்ட இந்த சைக்கிள்கள் முதற்கட்டமாக மும்பையில் மட்டும் விற்பனை வரவுள்ளது.

கூடுதலாக விநியோகஸ்தர்கள் அமையும் பொருட்டு, மற்ற மாநிலங்களுக்கும் பீயிங் ஹியூமன் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும்.

சுற்றுசூழல் பாதுகாப்பு மீது சல்மான் கான் காட்டும் அக்கறை!!

பீயிங் ஹியூமன் சைக்கிள்களில் அடிப்படை மாடலுக்கு ரூ.40,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல உயர்ரக மாடல்களுக்கு ரூ.57,000 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Salman Khan launches new range of Being Human e cycles on World Environment day. Click foe details...
Story first published: Tuesday, June 6, 2017, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X