இவருக்கு இப்படி ஒரு நிலைமையா! அதான் புல்லட் ப்ரூஃப் கார்ல போறாரு! கோடி கோடியா காசு இருந்தும் நிம்மதி இல்ல!

இந்தியாவில் திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் பலரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை (Luxury Cars) வைத்துள்ளனர். ஆனால் குண்டு துளைக்காத புல்லட் ப்ரூஃப் (Bullet Proof) கார்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்கள் மட்டுமே புல்லட் ப்ரூஃப் கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் புல்லட் ப்ரூஃப் கார்களை பயன்படுத்தி வரும் பிரபலங்களில் சல்மான் கான் (Salman Khan) மிகவும் முக்கியமானவர். மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளுடன், புல்லட் ப்ரூஃப் கார்களையும் சல்மான் கான் வைத்துள்ளார். சல்மான் கானிடம் உள்ள புல்லட் ப்ரூஃப் கார்களில், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 200 (Toyota Land Cruiser LC 200) குறிப்பிடத்தக்கது.

Salman Khan Spotted In Bullet Proof Toyota Land Cruiser

சல்மான் கான் வெகு சமீபத்தில் இந்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 200 புல்லட் ப்ரூஃப் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது சல்மான் கானின் சகோதரர் (Brother) அர்பாஸ் கானின் (Arbaaz Khan) இல்லத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.

அர்பாஸ் கானின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் (Birthday Party) சல்மான் கான் கலந்து கொண்டுள்ளார். அதை முடித்து விட்டு அவர் கிளம்பும்போதுதான், இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் வெள்ளை நிற டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 200 புல்லட் ப்ரூஃப் காரில் ஏறி பயணம் செய்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

Salman Khan Spotted In Bullet Proof Toyota Land Cruiser LC 200

துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் புடை சூழ, சல்மான் கான் புல்லட் ப்ரூஃப் காரில் பயணம் செய்துள்ளார். இந்த காரை பற்றி பேசுவதென்றால், சல்மான் கான் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 200 காரை வாங்கி, புல்லட் ப்ரூஃப் வாகனமாக மாடிஃபிகேஷன்களை செய்துள்ளார். இதுதவிர சல்மான் கானிடம் இன்னொரு புல்லட் ப்ரூஃப் காரும் இருக்கிறது.

அது நிஸான் பேட்ரல் (Nissan Patrol) கார் ஆகும். இந்த புல்லட் ப்ரூஃப் கார்கள், சல்மான் கான் மற்றும் அவருடன் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சல்மான் கான் புதிதாக வாங்கியுள்ள புல்லட் ப்ரூஃப் நிஸான் பேட்ரல் காரில், 5.6 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 405 ஹெச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிஸான் நிறுவனம் பேட்ரல் காரில், 4.0 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் வழங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் பேட்ரல் காருடன் இந்த இன்ஜின் ஆப்ஷனை நிஸான் நிறுவனம் வழங்கி கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நடிகர், நடிகைகளை போல் அல்லாமல், சல்மான் கான் புல்லட் ப்ரூஃப் கார்களை பயன்படுத்துவது ஏன்? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொள்ள கூடியவரான சல்மான் கான் உயிருக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல்கள் உள்ளன. லாரன்ஸ் பிசோனி (Lawrence Bishnoi) போன்ற குற்றவாளிகள், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

எனவேதான் சல்மான் கான் எப்போதும் புல்லட் ப்ரூஃப் கார்களில் பயணம் செய்து வருகிறார். அத்துடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். சல்மான் கான் உயிருக்கு ஆபத்து என்றால், அது சட்டம் ஒழுங்கை பாதிக்க கூடும் என்பதால், அரசும் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2023, 13:40 [IST]
English summary
Salman khan spotted in bullet proof toyota land cruiser lc 200 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+