சிங்கம் மாதிரி இருந்த நடிகர், இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு! கார் எல்லாத்தையும் புல்லட்-ப்ரூஃப் ஆக்குகிறார்
சல்மான் கான் (Salman Khan), பிரபல பாலிவுட் நடிகர் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அதேநேரம், சமீப காலமாக சல்மான் கானுக்கு அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருவதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இதனாலேயே, இப்போது எல்லாம் வெளியே வருவதாக இருந்தாலே புல்லட்-ப்ரூஃப் (Bullet-proof) செய்யப்பட்ட காரில் தான் நடிகர் சல்மான் கான் பயணிக்கிறார். இந்த நிலையில், தற்போது புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரில் சல்மான் கான் காட்சி தந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் சல்மான் கானின் பெயர் கடந்த காலங்களில் இருந்து பலமுறை, பல விஷயங்களுக்காக செய்திக்களில் வந்துள்ளது. ஆனால், சமீப காலமாக அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலான செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, நடிகர் சல்மான் கானை கொல்வதற்காக ஒரு கும்பல் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் செய்திகள் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில வாரங்களாக இவ்வாறான செய்திகள் சற்று குறைந்துள்ளன என்றாலும், நடிகர் சல்மான் கான் வெளியிடங்களுக்கு வரும்போது வேறு வழியின்றி முன்னெச்சரிக்கை உடன் பாதுகாப்பாக இருக்க முயற்சிக்கிறார். இதற்காக பாதுகாவலர்களின் எண்ணிக்கையை கூட்டியுள்ள சல்மான் கான், தனது கார்களையும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத அளவிற்கு புல்லட்-ப்ரூஃப் ஆக மாற்றி வருகிறார்.
அதுமட்டுமின்றி, இனி புதியதாக வாங்கும் கார்கள் அனைத்தையும் புல்லட்-ப்ரூஃப் தரத்துடன் வாங்கவே விரும்புகிறார். அந்த வகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் வாங்கிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் (Autobiography Long-Wheelbase) காரை ரூ.4 கோடி செலவு செய்து புல்லட்-ப்ரூஃப் ஆக மாற்றிக் கொண்டுள்ளார்.

அதாவது, இந்த ரேஞ்ச் ரோவர் காரின் விலை ரூ.3.3 கோடி மற்றும் தற்போது புல்லட்-ப்ரூஃப்-க்கு மாற்றுவதற்கு ரூ.4 கோடி செலவு. இது இல்லாமல், இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம், சாலை வரி என அதற்கு தனியாக ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் செலவாகும். ஆக மொத்தம் இந்த காருக்காக மட்டும் ரூ.8 கோடி வரையில் நடிகர் சல்மான் கான் செலவு செய்திருப்பார்.
புதியதாக புல்லட்-ப்ரூஃப்-க்கு மாற்றப்பட்ட ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் காரில் டிரைவருக்கு அருகே முன் இருக்கையில் அமர்ந்து நடிகர் சல்மான் கான் பயணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மும்பையின் பிரபலமான கடற்கரை சாலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், சல்மான் கானுடன் காரினுள் இன்னும் சிலர் இருப்பதை காணலாம்.
மேலும், நடிகர் சல்மான் கானின் பாதுகாப்புக்கு மஹிந்திரா பொலேரோ மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களில் பாதுகாவலர்கள் செல்வதையும் வீடியோவில் காண முடிகிறது. நடிகர் சல்மான் கானின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் கார் ஆனது போர்டோஃபினோ நீல நிறத்தில் இருக்க, காரின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதுமாக கருப்பு நிறத்தில் டிண்ட் செய்யப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும் விவிஐபிகள் ஆகிவிட்டாலே இவ்வாறான பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியதாக உள்ளது. தனது சொந்த விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரில் பயணிப்பதாக இருந்தால் கூட 10- 15 பேரை உடன் அழைத்து செல்ல வேண்டிய நிலை நடிகர் சல்மான் கானுக்கு உள்ளது. மேலும், இதற்காக கூடுதலாக ரூ.4 கோடி செலவு செய்ய வேண்டியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








