நீயெல்லாமா அட்வைஸ் பன்னுவ?: நடிகர் சல்மான்கானை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!!

Written By:

ஒரு சில தினங்களுக்கு முன்னர் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பாலிவுட் நடிகர் சல்மான் கான் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மின்சார சைக்கிள்களை மும்பையில் அறிமுகம் செய்தார்.

நடிகர் சல்மான் கானை வருத்தெடுக்கும் டிவிட்டர்வாசிகள்: காரணம் இது தான்!

மான்கள் வேட்டையாடியது, கார் விபத்து என வழக்குகள் ஒரு புறமும், பரபரப்பு கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்குவது என தொடர்ந்து அவப்பெயர் சம்பாதித்து வந்தார் சல்மான் கான்.

நடிகர் சல்மான் கானை வருத்தெடுக்கும் டிவிட்டர்வாசிகள்: காரணம் இது தான்!

இதுபோன்ற சூழ்நிலைகலை சமாளிக்க அவர் நிறுவிய அமைப்பு தான் ‘பீயிங் ஹியூமன்' தொண்டு நிறுவனம்.

2007ம் ஆண்டில் சல்மான் தொடங்கிய இந்த தொண்டு நிறுவனம், ஆதரவற்றோருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.

நடிகர் சல்மான் கானை வருத்தெடுக்கும் டிவிட்டர்வாசிகள்: காரணம் இது தான்!

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பீயிங் ஹியூமன் அமைப்பினரால் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பேட்டரிகளை கொண்டு மின்சாரத்தால் இயங்கும் இ-சைக்கிள்களை சல்மான் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

நடிகர் சல்மான் கானை வருத்தெடுக்கும் டிவிட்டர்வாசிகள்: காரணம் இது தான்!

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சல்மான் கான் சாலையில் அதிவேகத்தில் வாகனத்தை செலுத்துபவர்களை கண்டிக்கும் வகையில் பேசினார். மேலும் பந்தயத்தில் ஈடுபட நினைப்பவர்கள் பந்தய திடலில் சென்று பந்தயம் நடத்துங்கள் என்றும்.

நடிகர் சல்மான் கானை வருத்தெடுக்கும் டிவிட்டர்வாசிகள்: காரணம் இது தான்!

சாலைகளில் பந்தயங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து விளைவிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினார். சல்மானின் இந்த அறிவுரை சமூகவலைத்தளங்களிம் அவர் மீது எதிர்மறையான விமர்சனங்களை முன்னெடுத்துள்ளது.

இதற்கு காரணம் என்ன?

இதற்கு காரணம் என்ன?

2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி மும்பை பாந்திரா ஹில்ரோட்டில் சல்மான்கானின் கார் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரி மீது மோதியது. இதில் பேக்கரி முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் இறந்தார், 4 பேர் காயம் அடைந்தனர். குடித்துவிட்டு வாகனத்தை மோதி உயிரிழப்பு ஏற்படுத்தினார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் சல்மான் கானை வருத்தெடுக்கும் டிவிட்டர்வாசிகள்: காரணம் இது தான்!

இந்த வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மும்பை செஷன்சு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சல்மான் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, இதில் போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நடிகர் சல்மான் கானை வருத்தெடுக்கும் டிவிட்டர்வாசிகள்: காரணம் இது தான்!

கார் விபத்து வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இது குறித்து கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் தற்போது இவரே அதிவேகத்தில் சென்று விபத்து ஏற்படுத்துவதை கண்டிக்கும் விதமாக பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது என அவரை டிவிட்டரில் கிண்டலடித்து வருகின்றனர்.

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

சல்மான் இது குறித்து பேசியிருப்பது உலக அமைதியை வலியுறுத்தி ஹிட்லரே அறிவுரை கூறுவது போல உள்ளது என கூறியுள்ளார் ஒருவர்.

சாலை பாதுகாப்பு குறித்து சல்மான் அறிவுரை கூறுவது, வன விலங்கு பாதுகாப்பு குறித்து சல்மான் அறிவுரை கூறுவதற்கு சமம் என்று கூறியுள்ளார் ஒருவர்.

இதே போல கடன் வாங்கிவிட்டு எப்படி அதை சரியாக திரும்பிச் செலுத்துவது என விஜய் மல்லையா கூறுவதற்கு சமம் இது என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் சல்மான் கான் கருத்து கூறவில்லை அவர் நடிப்பு சொல்லித்தந்தார் என ஒருவர் கிண்டலாக கூறியுள்ளார்.

English summary
Read in Tamil about actor salman khan trolled in twitter for giving advice on road safety
Story first published: Wednesday, June 7, 2017, 13:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark