நடுரோட்டில் ரிப்பேரான ரேஞ்ச்ரோவர்... லேண்ட்ரோவரை டிவிட்டரில் 'வறுத்த' சல்மான்கான்!!
படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த நடிகர் சல்மான்கானின் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி நேற்று முன்தினம் இரவு நடுவழியில் ரிப்பேராகி நின்றுவிட்டதாம்.
இதையடுத்து, நேற்று டிவிட்டரில் லேண்ட்ரோவரையும், அதன் சர்வீஸ் லட்சணத்தையும் போட்டு வறு வறு என வறுத்தெடுத்துள்ளார் சல்மான்கான். டிவிட்டரில் 5 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட நடிகர் சல்மான்கான் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும் ஆளுக்கொரு பக்கம் லேண்ட்ரோவரை போட்டு வறுக்க துவங்கிவிட்டனர்.

முதல் ட்வீட்
முதல் ட்வீட் பதிவில்," கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எனது ரேஞ்ச்ரோவரில் இதுவரை 9 முறை பிரேக் பேடுகளை மாற்றிவிட்டேன்; ஒரு முறை சஸ்பென்ஷனையும் மாற்றினேன். கடைசியில் நேற்று அது ரிப்பேராகி நின்றே போய்விட்டது," என்று அங்காலாய்த்துள்ளார்.

இது சகஜமப்பா...
"பிரேக் பேடுகள் அடிக்கடி மாற்றுவது குறித்து சர்வீஸ் மையத்தில் கேட்டால் இது ரொம்ப ஹெவி கார் சார், எனவே, பிரேக் பேடை அடிக்கடி மாற்றுவது தவிர்க்க முடியாது என்கின்றனர். அப்படின்னா பஸ், டிரக், ரயில், விமானம் போன்றவற்றில் தினமும் பிரேக் பேடை மாற்றுகிறார்களா என்று கிண்டலாக வினவியுள்ளார்.

கஸ்டமர் சர்வீஸ்... அப்படின்னா?
மூன்றாவது ட்வீட் செய்தியில் லேண்ட்ரோவர் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கஸ்டமர் சர்வீஸ் பற்றிய அடிப்படை கொள்கை கூட இல்லை என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரிக்ஷாவில் பயணம்
ரேஞ்ச்ரோவர் ரிப்பேராகி நின்றுவிட்டதையடுத்து ரிக்ஷாவில் வீடு திரும்பியதாக அவர் தனது 4வது ட்வீட் செய்தியில் தெரிவித்துள்ளார்.

டாடா கவனத்திற்கு...
டாடாவின் மோசமான சர்வீஸ் பாரம்பரியம் லேண்ட்ரோவருக்கும் ஒட்டிக் கொண்டுவிட்டதா என்று சல்மான்கான் ஃபாலோயர்கள் பலர் டிவிட்டரில் கமென்ட் அடித்துள்ளனர்.

விலை
ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி ரூ.1.72 கோடி முதலான எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








