எமனே வந்தாலும் இவர தாண்டி அந்த நடிகர தொட முடியாது! பையன் ஆசபட்டதால யாராலயும் முடியாத காரியத்தை பண்ணியிருக்காரு

இந்தியாவை சேர்ந்த பிரபலமான நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களை வாங்கியது தொடர்பான செய்திகளை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் நீங்கள் அதிகம் வாசித்திருக்கலாம். ஆனால் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது, அவர்களிடம் பணியாற்றும் நபர்களும் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கி வருகின்றனர். இதற்கு ஷெரா (Shera) ஒரு மிகச்சிறந்த உதாரணம். இவரது உண்மையான பெயர் குர்மீத் சிங் ஜாலி (Gurmeet Singh Jolly) என்பதாகும். ஆனால் ஷெரா என்றால்தான், அனைவருக்கும் தெரியும். ஷெரா யார்? என்பதை பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு விளக்கத்தை வழங்கி விடுகிறோம்.

இவருக்கும், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் (Salman Khan) இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர் சல்மான் கானின் தனிப்பட்ட பாதுகாவலர் (Personal Bodyguard) ஆவார். எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் சல்மான் கான் உடன், அவரது பாதுகாவலர் ஷெராவை நீங்கள் பார்த்திருக்கலாம்.

Salman Khan s Bodyguard Shera Buys Mahindra Thar Roxx For His Son

இவர் சமீபத்தில் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். அது ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி (Range Rover SUV) ஆகும். இந்த வரிசையில் தற்போது மற்றொரு புத்தம் புதிய கார் ஒன்றை ஷெரா வாங்கியுள்ளார். அது மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) கார் ஆகும்.

ஆனால் ஷெரா இந்த காரை அவருக்காக வாங்கி கொள்ளவில்லை. மாறாக அவருடைய மகனுக்கு பரிசாக வழங்குவதற்காக வாங்கியுள்ளார். ஷெராவின் மகன் பெயர் ஆபிர் (Abir) என்பதாகும். இவருக்கு பரிசாக வழங்குவதற்காகவே புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் காரை ஷெரா வாங்கியுள்ளார்.

Mahindra Thar Roxx

மிகவும் ஆசைப்பட்ட மஹிந்திரா தார் ராக்ஸ் கார், தந்தையிடம் இருந்து பரிசாக கிடைத்ததையடுத்து, ஆபீர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார். எனவே இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் தனது தந்தைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராம் தளத்தில் தற்போது வேகமாக பரவி கொண்டுள்ளது.

மஹிந்திரா தார் ராக்ஸ் கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 12.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 22.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் இந்த காரை அவ்வளவு எளிதில் வாங்கி விட முடியாது. ஏனெனில் முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 1 மணி நேரத்திலேயே 1.76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மஹிந்திரா தார் ராக்ஸ் காரை புக்கிங் செய்து விட்டனர். எனவே மஹிந்திரா தார் ராக்ஸ் காருக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) மிகவும் அதிகமாக உள்ளது.

அதாவது முன்பதிவு செய்திருந்தாலும் இந்த காரை டெலிவரி பெறுவது என்பது குதிரை கொம்புதான். நிலைமை இப்படி இருக்கும்போது ஷெரா தனது மகனுக்காக மஹிந்திரா தார் ராக்ஸ் காரை டெலிவரி பெற்று பரிசாக வழங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. மஹிந்திரா தார் ராக்ஸ் காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் மஹிந்திரா தார் ராக்ஸ் காரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் ஒரு கார் ஆகும். எனவே ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்ட ஆபிர் போன்ற கட்டுமஸ்தான நபர்களுக்கு மஹிந்திரா தார் ராக்ஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, October 18, 2024, 12:59 [IST]
English summary
Salman khans bodyguard shera buys mahindra thar roxx for his son
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+