அந்த நடிகரோட மச்சானா இவரு! தத்து எடுத்து வளத்த தங்கச்சியை இவருக்குதான் கல்யாணம் பண்ணி குடுத்துருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் இக்யூஎஸ் (Mercedes Benz Maybach EQS). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இன்னும் விரிவாக சொல்வதென்றால், எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 2.25 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் பல லட்ச ரூபாய் கூடுதலாக வரும். இந்த விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரில், 122 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது.

இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 611 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொலை தூர பயணங்களுக்கும் ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. அதே சமயம் இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும்.

Aayush Sharma Buys Mercedes Benz Maybach EQS

இதன் பவர் அவுட்புட் 658 பிஎஸ் மற்றும் 950 என்எம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், 3 ஸ்க்ரீன் செட்-அப் குறிப்பிடத்தக்கது ஆகும். அதாவது இந்த காரின் முன் பகுதியில் 3 திரைகள் வழங்கப்பட்டிருக்கும்.

இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். மற்றொரு திரை முன் பக்க பயணி முன்பாக வழங்கப்பட்டிருக்கும். இதுதவிர பனரோமிக் சன்ரூஃப்கள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர்கள் போன்ற வசதிகளையும் இந்த கார் கொண்டுள்ளது.

Mercedes Benz Maybach EQS

அத்துடன் அனைத்து இருக்கைகளுக்கும் வென்டிலேஷன் வசதி, லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS), 11 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா போன்ற அதிநவீன வசதிகளும் கூட, மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இவ்வளவு விலை உயர்ந்த காரை பிரபல நடிகர் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் ஆயுஷ் ஷர்மா (Ayush Sharma) ஆவார். பாலிவுட் திரைப்படங்களில் ஆயுஷ் ஷர்மாவை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மானின் கானின் (Salman Khan) மைத்துனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதாவது சல்மான் கானின் இளைய சகோதரியான அர்பிதா கானைதான் (Arpita Khan), ஆயுஷ் ஷர்மா திருமணம் செய்துள்ளார். அர்பிதா கான், சல்மான் கானின் உடன் பிறந்த சகோதரி அல்ல.

அவர் சல்மான் கான் குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர் ஆவார். இவை எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியாத தகவல்கள் ஆகும். ஆயுஷ் ஷர்மா விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரில் தனது குடும்பத்துடன் வலம் வரும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வைரல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. நடிகர் ஆயுஷ் ஷர்மாவிடம் ஏற்கனவே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) உள்பட பல்வேறு கார்கள் உள்ளன. இந்த வரிசையில் அவரது கார் கலெக்ஸனில் (Car Collection) தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் கார் இணைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரபலங்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது ஒரு வகையில் நல்லதுதான். பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க இது உதவி செய்யும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. ஆயுஷ் ஷர்மாவிற்கு முன்பாகவே இன்னும் பல்வேறு பிரபலங்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்கியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, October 28, 2024, 13:39 [IST]
English summary
Salman khans brother in law aayush sharma buys mercedes benz maybach eqs viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+