நடிகருக்கு முடி வெட்டி விடுபவரிடம் இவ்வளவு பணமா! அந்த நடிகர்கிட்ட கூட இந்த ஸ்கூட்டர் இருக்குமானு தெரியல!!

நடிகர் சல்மான் கான் (Actor Salman Khan) என்றதும் நம் அனைவருக்கும் சட்டெர்ன நியாபகத்திற்கு வருவது அவரது கட்டுக்கோப்பான உடலமைப்பு தான். ஆனால், அவரது ஹேர் ஸ்டைல் (Hair Style)-ஐ எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள் என தெரியவில்லை. சல்மான் கானின் அழகிய ஹேர் ஸ்டைலுக்கு காரணம், அவருக்கு முடித்திருத்தம் செய்பவரான அலிம் ஹகிம் (Aalim Hakim) என்பவர் ஆவார். இதன் காரணமாகவே அவ்வப்போது செய்திகளில் இடம்பெறும் அலிம் ஹகிம் தற்போது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ ஸ்கூட்டர் (BMW Scooter)-ஐ வாங்கியதன் மூலம் கவனத்தை பெற்றுள்ளார்.

விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று, பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) ஆகும். பிரபலமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2-வீலர் உற்பத்தி நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் ஆகும். மோட்டார்சைக்கிள்களை மட்டுமே உற்பத்தி செய்துக் கொண்டிருந்த பிஎம்டபிள்யூ மோட்டார்ராட், சில வருடங்களுக்கு முன் முதல்முறையாக ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

salmankhans hair styler buys scooter

அந்த முதல் பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அலிம் ஹகிம் தற்போது வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் 2வது ஸ்கூட்டர் ஆகும். ஆம், முதல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பின்னர் சில மாதங்களிலேயே 2வது ஸ்கூட்டரை களமிறக்கும் பணியில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இறங்கியது.

அதன்படி வெளிவந்த 2வது பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர், சிஇ-02 (CE-02) ஆகும். சுமார் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான இந்த ஸ்கூட்டரை மனைவி மற்றும் இரு மகன்கள் உடன் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் (Mercedes-Benz V-Class) என்கிற லக்சரியான எம்பிவி கார் (MPV Car)-இல் புனேவில் உள்ள ஷோரூக்கு சென்று அலிம் ஹகிம் டெலிவிரி பெற்றுள்ளார்.

salmankhans hair styler buys scooter

ஸ்கூட்டருக்கு முன்பு கேக் வெட்டி அலிம் ஹகிமின் குடும்பம் டெலிவிரி எடுத்துள்ளது. இதுதொடர்பான படங்களை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அளவிற்கு பிரபலமானவரா என கேட்டால், ஆம்... பிரபலமான நடிகர்களிடம் முடித்திருத்துபவராக பணியாற்றுவதன் மூலமாக பாலிவுட் (Bollywood)-இல் கவனிக்கத்தக்க விஐபி ஆக அலிம் ஹகிம் உள்ளார்.

நடிகர் சல்மான் கானுக்கு மட்டுமின்றி, பாலிவுட் நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன் (Hrithik Roshan) மற்றும் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor)-இன் முடித்திருத்துபவராகவும் அலிம் ஹகிம் உள்ளார். பிஎம்டபிள்யூ சிஇ-02 ஸ்கூட்டரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதன் முன்பக்கத்தில் செவ்வக வடிவில் எல்இடி ஹெட்லைட் மற்றும் பெரிய விண்ட்ஸ்க்ரீன் (Windscreen) வழங்கப்படுகிறது.

salmankhans hair styler buys scooter

நன்கு உயரமான ஹேண்டில்பார், பெரிய மோனோபிளாக்-ஸ்டைல் அலாய் சக்கரங்கள், கோல்டன் நிறத்தில் ஷாக் அப்சார்பர்ஸ் (Absorbers) உள்ளிட்டவை இந்த விலையுயர்ந்த ஸ்கூட்டரின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும். 142 கிலோ எடை கொண்ட சிஇ-02 ஸ்கூட்டர் இந்திய சாலைகளுக்கு என்றே தரையில் இருந்து கொஞ்சம் உயரமாக வடிவமைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற எல்லா ஸ்கூட்டர்களில் இருந்தும் பெரிதும் வித்தியாசமானது பிஎம்டபிள்யூ சிஇ-02 ஸ்கூட்டர் ஆகும். பிஎம்டபிள்யூவின் முதல் ஸ்கூட்டர் கூட பார்ப்பதற்கு ஸ்கூட்டர் மாதிரி இருக்கும். ஆனால், சிஇ-02 ஆனது மினி பைக் போன்று உள்ளது. இத்தகைய ஸ்கூட்டரை ஒருவர் வாங்குகிறார் என்றால் நிச்சயமாக அவர் மாடர்ன் டிரெண்ட்கள் மீது ஆர்வமிக்கவராகவே இருப்பார்.

More from DriveSpark

Article Published On: Monday, December 30, 2024, 11:35 [IST]
English summary
Salman khans hair styler buys bmw ce 02 scooter with family
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X