பாலிவுட் அரசன் சல்மான்கான் ஆடம்பர பஸ் - ஒரு பார்வை
"நாம் வாழ நினைக்கும் கனவு வாழ்க்கையை தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சல்மான்கான்," என்று பேட்டி ஒன்றில் பிரபுதேவா கூறியது 100 சதவீதம் உண்மை என்பதற்கு பல சான்றுகள் அடுக்கப்படுகின்றன. அவரது வீடு, கார் என இந்த பட்டியல் நீள்கிறது.
இதில், சல்மான்கான் வைத்திருக்கும் ஆடம்பர பஸ் ஒன்றும் அடக்கம். டிசி நிறுவனம் வடிவமைத்து கொடுத்த இந்த பஸ்சின் ஒவ்வொரு பகுதியும் இழைக்கப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

வித்தியாசம்
இதன் ஆடம்பரத்தை வெளிப்புறத்திலும் கொண்டு வந்திருக்கும் டிசியின் கைவண்ணம் பளிச்சிடுகிறது. முன்புறத்தில் நடுநாயகமாக டிசியின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இடவசதி
சிறந்த உட்புற இடவசதியுடன் இந்த பஸ் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. உட்புற அறையில் சல்மான்கான் பெரிய புகைப்படம் ஒன்றையும் பொருத்தியுள்ளது டிசி.

படப்பிடிப்புக்காக..
வெளிப்புற படப்பிடிப்பின்போது இந்த பஸ்சை சல்மான்கான் பயன்படுத்துகிறார். குளியலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது.

பெட்ரூம்
பஸ்சில் சல்மான்கானுக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கையறை இது. குளிர்சாதன வசதி, ஹீட்டர் மற்றும் தீத்தடுப்பு கருவி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓவியம்
படுக்கையறையில் நேராக தெரியும் அந்த படம் சல்மான்கானின் ஓவியம். அதற்கு அடுத்து டிவி திரை பொருத்தப்பட்டுள்ளது.

நேர்த்தியான டிசைன்
பஸ்சின் உட்புறத்தில் ஒவ்வொரு பாகத்தையும் மிக நேர்த்தியாகவும், இடவசதியை மிக சரியாகவும் பயன்படுத்தி டிசி வடிவமைத்துள்ளது.

மேக்கப் அறை
பஸ்சில் மேக்கப் அறை ஒன்றும் உள்ளது. வெளிப்புற படப்பிடிப்புக்கு ஏதுவாக இந்த மேக்கப் அறையில் அனைத்து வசதிகளும், விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

3 பகுதிகள்
இந்த பஸ்சின் உட்புறம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

ஷாரூக்கான் பஸ்
அசத்தலான வசதிகள் கொண்ட ஷாரூக்கான் மல்டி ஆக்சில் ஆடம்பர மாளிகை செய்திக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








