சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்த சல்மான் கான்: காரணம் இது தான்..!!

Written By:

பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவர் சல்மான் கான், இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.

 சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்த சல்மான் கான்..!!

கார் விபத்து வழக்கில் சிக்கி மீண்ட சல்மான் கான் தற்போது படங்களில் நடிப்பதிலும், ‘பீயிங் ஹியூமன்' என்ற தனது அமைப்பின் மூலம் சமூக பணிகள் செய்வது என பிஸியாக இருக்கிறார்.

 சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்த சல்மான் கான்..!!

சமீபத்தில் கூட தனது பீயிங் ஹியூமன் அமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கொண்டாடப்பட்ட விழாவில் கலந்துகொண்டு பேட்டரிகளை கொண்டு மின்சாரத்தால் இயங்கும் இ-சைக்கிள்களை சல்மான் அறிமுகப்படுத்தினார்.

 சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்த சல்மான் கான்..!!

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பையின் போக்குவரத்து மிகுந்த சாலையில் நடிகர் சல்மான் கான் திடீரென தனது பீயிங் ஹியூமன் மின்சார சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

 சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்த சல்மான் கான்..!!

அப்போது ரசிகர்கள் யாரும் சூழ்ந்துவிடாமல் தடுக்கும் விதமாக அவரது பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக உடன் வந்தனர்.

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நட்சத்திர நடிகரை சாலையில் பார்ப்பதே அரிதாக இருக்கும் நிலையில் இவர் சைக்கிள் ஓட்டிச் சென்றது பரபரப்பான செய்தியாக மாறியது.

 சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்த சல்மான் கான்..!!

இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே அதே நாளில் அடுத்த சம்பவம் அரங்கேறியது. நடிகர் சல்மான் கான் அன்றிரவு தனது சகோதரர் சோஹைல் கானுடன் தன் வீட்டின் அருகேயுள்ள ஸ்டூடியோ ஒன்றிற்கு சென்றுள்ளார்.

 சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்த சல்மான் கான்..!!

மும்பை பாந்திரா பகுதியில் உள்ள அந்த ஸ்டூடியோவிற்கு சகோதரருடன் தனது காரில் சென்று சல்மான் அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்ல வாடகை ஆட்டோவை தேர்ந்தெடுத்துள்ளார்.

 சைக்கிள் மற்றும் ஆட்டோவில் பயணித்த சல்மான் கான்..!!

சல்மானும், திரைப்படத் தயாரிப்பாளர் ரமேஷ் தவுரானியும் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளனர். ஆட்டோவிற்கான வாடகைத் தொகை 1000 ரூபாயையும் சல்மானே செலுத்தியுள்ளார்.

ஆடம்பர வசதிகள் நிறைந்த சல்மான் கான் ஆட்டோவில் சென்றிருக்கிறாரே என்று பலரும் ஆச்சரியப்பட்டு வரும் நிலையில், அவர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் டியூப்லைட் என்ற படத்தின் விளம்பரத்திற்காக இப்படி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

English summary
Read in Tamil about Salman khan travels in bicycle and auto in same for film promotion
Story first published: Thursday, June 15, 2017, 11:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark