உப்புத்தண்ணீரில் ஓடும் ஸ்போர்ட்ஸ் கார்... ஜெர்மன் நிறுவனம் அசத்தல்!

By Saravana

பொதுவாக ஸ்போர்ட்ஸ் கார் என்றாலே சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாததாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத ஓர் புதிய ஸ்போர்ட்ஸ் காரை நானோ ஃப்ளைசெல் என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் உப்புத் தண்ணீரில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரை பொது சாலைகளில் வைத்து பரிசோதனைகள் நடத்தவும், இயக்குவதற்கும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

பல சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

5.25 மீட்டர் நீளமும், 2.2 மீட்டர் அகலமும் கொண்டது. கல்விங் ஸ்டைலிலான கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 22 இஞ்ச் வீல்கள் கம்பீரமான தோற்றத்தை கொடுக்கின்றன.

4 சீட்டர் கார்

4 சீட்டர் கார்

குவாந்த் இ- ஸ்போர்ட்லிமோசின் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 4 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்டது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இந்த ஸ்போர்ட்ஸ் கார் ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை போன்றே தொழில்நுட்பம் கொண்டது. ஆனால், உப்புத்தண்ணீரை ஒரு சவ்வு வழியாக செலுத்தி அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

தொட்டிகள்

தொட்டிகள்

இந்த காரில் 200லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளில் உப்புத் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இரண்டு தொட்டிகளிலும் உள்ள உப்புத் தண்ணீர் மூலம் 600 கிமீ வரை செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மின்மோட்டார்கள்

மின்மோட்டார்கள்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 4 மின்மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 920 எச்பி பவரை அளிக்கும்.

முக்கிய சிறப்பு

முக்கிய சிறப்பு

லித்தியம் அயான் பேட்டரி எடையுடன் ஒப்பிடும்போது, அதே எடையில், அதை விட 5 மடங்கு சிறப்பான திறனை அளிக்கும் என நானஃப்ளோசெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசத்தல் பெர்ஃபார்மென்ஸ்

அசத்தல் பெர்ஃபார்மென்ஸ்

2,300 கிலோ எடை கொண்ட இந்த கார் வெறும் 2.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 380 கிமீ வேகம் வரை செல்லும்.

உற்பத்தி

உற்பத்தி

சாலை சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பின்னர் இந்த காரை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கும் நானோஃப்ளோசெல் நிறுவனம் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த கார் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The new Quant e-Sportlimousine sports car has received approval from European union. The car, which uses an electrolyte flow cell power system, is now certified for use on German and European roads for road tests.
Story first published: Wednesday, September 3, 2014, 11:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X