வருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு சூப்பர் பைக் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா!
Read in Tamil: Actress Samantha has gifted a sport bike to lover Naga Chaitanya. தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு சூப்பர் பைக்கை பரிசாக கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.
பொதுவாக காதலியை இம்ப்ரெஸ் செய்வதற்கு விதவிதமான பரிசுப் பொருட்களை காதலர்கள் வாங்கி கொடுப்பது வழக்கமான விஷயம்தான். திரைப்படங்களிலும் காதலிக்கு பரிசு வாங்கி கொடுத்தே பர்ஸ் பழுத்து போய்விடுவது போல காட்சிகள் இடம்பெறுகின்றன.
ஆனால், திரை நட்சத்திரங்களின் நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர் மாறாக இருப்பதுண்டு. அதுபோன்று, தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து திக்குமுக்காட செய்து வருகிறாராம் நடிகை சமந்தா. அந்த வகையில், சமீபத்தில் அவர் நாக சைதன்யாவுக்கு வாங்கி கொடுத்து இருக்கும் காஸ்ட்லியான பரிசு பற்றிய தகவல் மீடியா வரை வந்துவிட்டது.

ஆம். தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான எம்வி அகுஸ்ட்டா சூப்பர் பைக்கை வாங்கி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா. இதுவரை சமந்தா கொடுத்த பரிசுகளிலேயே இதுதான் நாக சைதன்யாவை நெக்குறக செய்துவிட்டதாம். தனது டேஸ்ட்டை தெரிந்து கொண்டு அதற்கேற்ப, இந்த பரிசுப் பொருளை வாங்கி கொடுத்திருப்பதாக நாக சைதன்யா சந்தோஷத்தில் திளைத்து போயிருக்கிறாராம்.

அந்த சூப்பர் பைக்கை வாங்கி கொடுத்த கையோடு, அந்த பைக்கிற்கு பேன்ஸி நம்பரையும் தேர்வு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார் சமந்தா. TS07 FM 2003 என்ற அந்த பேன்ஸி நம்பருக்காக ரூ.5 லட்சத்தை செலவழித்துள்ளார் நடிகை சமந்தா.

தனது வருங்கால கணவர் நாக சைதன்யா சூப்பர் பைக் பிரியர். அவரிடம் பல சூப்பர் பைக்குகள் இருந்தாலும், மிகவும் தனித்துவமான சூப்பர் பைக்கை வாங்கி கொடுக்க எண்ணி அவர் தேர்வு செய்த பிராண்டுதான் எம்வி அகுஸ்ட்டா எஃப்-4 சூப்பர் பைக்.

இத்தாலியை சேர்ந்த எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த சூப்பர் பைக் மாடல்களில் ஒன்று எஃப்- 4 1000 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த மாடலாகவும் இதனை கூறலாம்.

வைரக்கல் போன்ற ஹெட்லைட் அமைப்பு, காற்றை கிழித்துச் செல்வதற்கான சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்கும் ஃபேரிங் பேனல்கள், வலிமையான தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு என சூப்பர் பைக்குகளில் சற்று வித்தியாசத்தையும், தனித்துவத்தையும் பெற்றிருக்கிறது. இருக்கையின் கீழே நான்கு புகைப்போக்கி குழல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

191 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 192 பிஎச்பி பவரையும், 111 என்எம் டார்க் திறனையும ்வழங்கும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலமாக பின்புற சக்கரத்திற்கு செலுத்தப்படுகிறது.

இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 291 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒற்றை இருக்கை அமைப்பு இருப்பதால் பின்னால் அமர்ந்து செல்வதற்கு வாய்ப்பு இல்லை.

இந்த சக்திவாய்ந்த பைக்கில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், வளைவில் சாய்ந்து திரும்பும்போது அபாயகரமான சாய்வு நிலையை எச்சரிக்கும் லீன் ஆங்கிள் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சக்கரங்கள் வழுக்கித் செல்வதை தவிர்க்கும் வசதி என பாதுகாப்பு வசதிகளுக்கு பஞ்சமில்லை.

இந்தியாவில் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அதில், மேட் பிளாக்- ரெட் என்ற கருப்பு- சிவப்பு வண்ணக் கலவை கொண்ட மாடலை நாக சைதன்யாவுக்கு வாங்கி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.
புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்!
புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications