குக் வித் கோமாளி மாதிரி நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ80 லட்சத்திற்கு கார் வாங்கியது இவரா? எவ்வளவு தான் சம்பளம்?

தமிழில் பிரபலமான டிவி நிகழ்ச்சியான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியை ஹிந்தியில் காப்பியடித்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "லாஃப்டர்ஸ் செஃப்" என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான சமர்த் ஜூரெல் என்பவர் தற்போது சுமார் 80 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இவ்வளவு அதிக விலை மதிப்பு கொண்ட காரர் இவர் எப்படி வாங்கினார்? இந்த காரில் என்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழில் துவங்கப்பட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமான டிவி நிகழ்ச்சியான "குக் விரத் கோமாளி" . ஒரே நேரத்தில் சமையல் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் ஒன்றாக சேர்ந்து சமைப்பது போல இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. சமையல் கலை குறித்தும் காமெடியும் ஒரே இடத்தில் கலந்ததால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மற்ற சேனல்கள் இதே போன்ற நிகழ்ச்சியை நடத்த தொடங்கினார்கள்.

Samarth Jurel Buys Range Rover

இதையடுத்து இந்தியில் கலர் டிவி சார்பில் செஃப் என்ற குக் வித் கோமாளியை போன்ற காமெடி மற்றும் சமையல் ஆகிய இரண்டையும் கலந்த ஒரு நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடந்தது இதன் சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. இதில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் சமர்த் ஜூரெல். இவர் ஒன்றும் புதிய முகம் கிடையாது. இவர் ஏற்கனவே ஹிந்தியில் பிக் பாஸ் 17வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர். அப்பொழுது இவரது துடிப்பான குணாதிசியம் மற்றும் காமெடியான பேச்சு காரணமாக மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டார்.

இதன் காரணமாகவே இவர் லாஃப்டர் செஃப் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் காரில் இருப்பது போலவும் அந்த காரை அவர் புதிதாக ஓப்பன் செய்வது போலவும் காட்சிகள் இருந்தன.

இந்த வீடியோவின் படி இவர் இந்த காரை சொந்தமாக வாங்கி உள்ளார். புதிதாக இந்த காரை வாங்கி உள்ளார் ஷோரூம் இல் வைத்து இந்த காரை திறப்பது போன்ற வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார்களைப் பொறுத்தவரை மொத்தம் ரூபாய் 67 லட்சம் முதல் 2.40 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன. இதில் இவர் வாங்கியது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் வேளார் என்ற காராகும்.

இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 87.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கின்றன. இரண்டு விதமான இன்ஜின் கிட்டத்தட்ட ஒரே விலையில் தான் விற்பனையாகி வருகிறது. இந்த வாகனம் பாதுகாப்பு அம்சங்களுக்காக அதிக பேர் பெற்ற வாகனமாக இருக்கிறது. இதில் ஆறு ஏர் பேக்குகள் ஏபிஎஸ் உடன் கூடிய கார்னரின் பிரேக் கண்ட்ரோல் டயர் அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் முன்பக்கம் led ஹெட் லைட் மற்றும் சிக்னேச்சரான டிஆர்எல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதெல்லாம் இந்த வீடியோவிலும் தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த காரின் உட்பகுதியில் 11.4 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார்ப்பளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் இடம் பெறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழில் வெளியான குக் வித் கோமாளி என்ற டிவி நிகழ்ச்சியை காப்பி அடித்து ஹிந்தியில் அதே போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதில் பிரபலமான நடிகர் ஒருவர் இவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கி இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. சமீபத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலத்தை வைத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் பலர் இவரது வளர்ச்சியை ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2025, 9:00 [IST]
English summary
Samarth jurel buys range rover 80 lakh video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+