யூடியூபில் சம்பாதித்தே ரூ 1.2 கோடிக்கு காரை வாங்கிய பிரபலம் இவரா? இவ்வளவு சம்பாதிச்சிட்டாரா?

இந்தியாவில் பண்டிகை காலங்களில் பலர் வாகனங்களை வாங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். இந்த வகையில் வட இந்தியாவில் பிரபல யூட்யூபரான சமே ரெய்னா என்பவர் தீபாவளி கொண்டாடும் வகையில் ரூபாய் 1.2 கோடி மதிப்பிலான காரை சொந்தமாக வாங்கியுள்ளதாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வட இந்தியாவில் பிரபலமான யூடியூபராக இருப்பவர் சமே ரெய்னா இவர் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து வருகிறார் இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் காமெடி செய்து பலரை கவனத்தை ஈர்த்தவர். இவர் இந்தியாவில் முழுவதும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் இவர் தீபாவளியை கொண்டாடும் விதமாக சொந்தமாக டொயோட்டா நிறுவனத்தின் வில் ஃபயர் என்ற காரை வாங்கியுள்ளார். அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Samay Raina buys Toyota Vellfire

இந்த டொயோட்டா கார் ரூபாய் 1.2 கோடி கொண்ட காராக இருக்கிறது. இந்த புகைப்படத்தின் படி அவர் கருப்பு நிற காரை வாங்கியுள்ளார். இவர் தனது பெற்றோர்களுடன் ஷோரூம்க்கு சென்று அங்கு இந்த காரை வாங்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த டொயோட்டா வில்ஃபையர் காரை பொறுத்தவரை இதில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 193 எச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சொகுசு எம்பிவி ரக காராக இருந்தாலும் ஹைபிரிட் சிஸ்டத்தில் இயங்குவதால் இந்த கார் 16 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.

Samay Raina buys Toyota Vellfire

இதனால் நீண்ட தூரம் பயணிப்பதற்கு இந்த கார் ஏற்றதாக இருக்கிறது. இந்த கார் முழுமையாக சொகுசு மற்றும் தொழிற்நுட்பத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட காராக இருக்கிறது. இந்த கார் கிட்டத்தட்ட ஒரு சொகுசு பங்களா போன்ற அம்சங்களை கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் உள்ளே சாய்வு வசதியுடன் கூடிய கேப்டன் சீட்டுகள் மசாஜ் அம்சங்களுடன் உள்ளன. இது போக இந்த காரில் 14 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் 15 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் ஆடியோ செட்டப். இதுபோக 14 இன்ச் பின்பக்க என்று டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இரண்டாவது வரிசை சீட்டுகளை பொறுத்தவரை கண்ட்ரோல் யூனிட் கையில் எடுத்து வைத்து ஆப்பரேட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஆம்பியன்ஸ் லைட்டுகள் 14 கலர் ஆப்ஷன்கள் உடன் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் டூயல் சன்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதிக இட வசதி மற்றும் சொகுசு வசதியை மனதில் வைத்து இது வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் டிரைவர் சீட்டில் எட்டு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் அட்ஜஸ்டபிள் ஆப்ஷனும், மெமரி செட்டிங்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக ஒரு டச்சில் கதவு திறக்கக்கூடிய பவர் ஸ்லைடிங் டோர்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சமும் இந்த காரில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கீப்பிங் அஸிஸ்ட் பிளைன் ஸ்பாட் மானிட்டரிங் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 1.19 கோடி முதல் 1.29 கோடி வரை விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி சில்வர் மைக்கா மேட்டாலிக் வேர்ல்ட் ஒயிட் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் ரெய்னா இந்த காஸ்ட்லியான காரை வாங்கியது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. தற்போது பிரபலங்கள் பலர் இந்த காரை வாங்கி வருகிறார்கள் இவர் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்கள் கூட இந்த காரை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கார் பல்வேறு வசதிகளை வழங்குவதால் பலருக்கு இந்த கார் தேவை இருக்கிறது. இந்த காருக்கு போட்டியாக விற்பனையாகும் கார்கள் எதுவும் இந்த அளவுக்கு விற்பனையாக உள்ள என்று குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, October 20, 2025, 15:00 [IST]
English summary
Samay raina buys toyota vellfire luxury mpv features price
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+