போலீசார் கிட்ட இந்த மொபைல் போன் இருந்தால் கொஞ்சம் உஷாரா இருங்க! யாராலும் தப்பிக்க முடியாது!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. இதன் காரணமாகவே, சாலை விதிமீறல்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டாலும், சாலை விதிமீறல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைந்தப்பாடில்லை. இருப்பினும், போலீசாரும் விடாப்பிடியாக விதிமீறல்களில் ஈடுப்படுவோரை தங்களது புது, புது ஐடியாக்களை கொண்டு அடையாளம் கண்டு தண்டித்து வருகின்றனர். அந்த வரிசையில், குறிப்பிட்ட சில கேரள போலீசார் புதுமையான வழியை பின்பற்ற துவங்கியுள்ளனர். அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எல்லா காலத்திலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத இளம் தலைமுறையினரும் இருக்க தான் செய்கின்றனர். அதாவது, அதிவேகமாகவும், ஆக்ரோஷமாகவும் வாகனம் ஓட்டும் இளைஞர்களை சமீப காலமாக சாலையில் அதிகமாக பார்க்க முடிகிறது. இத்தனைக்கும் ஒவ்வொரு சாலையிலும் ஏஐ கேமரா (AI Camera)-களும், வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கருவிகளும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

samsung s24 used by police

இவை எல்லாவற்றையும் ஏமாற்றி செல்லும் இளைஞர்களும் இருக்கின்றனர். அத்தகையவர்களை பிடிப்பதற்காகவே போலீசாரும் புது, புது ஐடியாக்களை உபயோகிக்கின்றனர். அந்த வகையில் சில கேரள போலீசார், சாம்சங் எஸ்24 அல்ட்ரா (Samsung S24 Ultra) மொபைல் போனை கொண்டு அதிவேகமாக பைக்கில் சென்ற இரு இளைஞர்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்துள்ளனர்.

போலீசாரை கண்டதும் நம்பர் பிளேட்டை மறைத்துக் கொண்டு பைக்கில் அதிவேகமாக சென்ற போதிலும், போலீசார் தங்களிடம் இருந்த சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் போனை துரிதமாக பயன்படுத்தி அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த சாம்சங் மொபைல் ஆனது அதன் தெளிவான கேமரா காட்சிக்காக பிரபலமானதாக விளங்குகிறது. அதற்கேற்ப இந்த மொபைல் போனின் விலையும் அதிகமாகும்.

samsung s24 used by police

இப்படியொரு மொபைல் போன் வாகன சோதனையில் இருந்த போலீசாரிடம் இருப்பதை அறியாமல், இளைஞர்கள் இருவரும் போலீசாரை கடந்தப்படி வேகமாக சென்றுள்ளனர். வேகமாக சென்ற போதிலும் போலீசார் தங்களது பைக்கின் நம்பர் பிளேட்டை பார்த்துவிட கூடாது என்பதற்காக, பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தனது ஒரு கையால் பின்பக்க நம்பர் பிளேட்டை மறைத்தப்படி செல்வதை வீடியோவில் காணலாம்.

அதுமட்டுமின்றி, நம்பர் பிளேட்டை மறைத்தப்படி சென்றவர் ஹெல்மெட் அணிந்தில்லாததையும் வீடியோவில் காண முடிகிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் (Royal Enfield Bullet) போன்ற விலையுயர்ந்த பைக்கில் செல்பவர்களிடம் கூட கூடுதலாக ஒரு ஹெல்மெட் இல்லையா என்றுதான் கேட்க தோன்றுகிறது. நம்பர் பிளேட்டை மறைத்தப்படி சென்றிருப்பினும், போலீசார் தங்களிடம் உள்ள அல்ட்ரா-ஜூம் (Ultra-zoom) மொபைல் போனை கொண்டு பைக்கின் வாகன பதிவெண்ணை கண்டறிந்தனர்.

samsung s24 used by police

இதன்பின் பைக் உரிமையாளருக்கு இ-மெயில் வாயிலாக இ-செல்லான் அனுப்பி வைக்கப்படும். இத்தனைக்கும், இந்த இளைஞர்களை குறி வைத்து போலீசார் மொபைல் போனில் காட்சிப்படுத்தவில்லை. மாடிஃபை (Modify) செய்யப்பட்ட பைக்கை ஒருவர் ஓட்டி வந்ததற்காக அவரை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது, போலீஸ்காரர் ஒருவர் மட்டும் தன்னிடம் இருந்த சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் போனின் மூலம் தூரமாக ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றனவா என ஆராய்ந்துக் கொண்டிருந்த போது, புல்லட் பைக்கில் இந்த இளைஞர்கள் சிக்கியுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாம்சங் நிறுவனத்தின் விலைமிக்க எஸ்24 அல்ட்ரா மொபைல் போனின் கேமரா எந்த அளவிற்கு கூர்மையானது என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாகும். இந்த கேரள போலீசாரை பின்பற்றி மற்ற போலீசாரும் இவ்வாறு அதிநவீன சாதானங்களை பின்பற்றி சாலை விதிமீறல்களை தடுக்க முற்பட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 30, 2024, 20:44 [IST]
English summary
Samsung s24 ultra phone used by kerala police to detect law breakers
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X