இவ்வளவு பெரிய நடிகருக்கு இதுதான் முதல்முறையாம்... 57 வயதில் மாஸ் காட்டுவது பிரபல நடிகர் இவரா?

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கை ஓட்டி பார்க்க யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். மற்ற பைக்குகளை ஓட்டுவதற்கும், ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை ஓட்டி பார்த்தவர்களுக்கு தெரியும். இதனாலேயே மிகுந்த செல்வந்தர்கள் கூட ராயல் என்ஃபீல்டு பைக்கை வைத்துள்ளனர். இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், பிரபல நடிகர் ஒருவர் திரைப்படத்திற்காக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Himalayan) பைக்கை ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

"மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்" என்கிற பாடலை கேட்டாலே ஒருவரது முகம் தான் நம் நினைவிற்கு வரும், அவர்தான் நடிகர் ரஹ்மான். 1967ஆம் ஆண்டில் அபுதாபியில் பிறந்தவரான ரஹ்மான் மலையாள நடிகராக சினிமாவில் அறிமுகமாகினாலும், அதன்பின் 1990, 2000ஆம் காலக்கட்டங்களில் கோலிவுட்டிலும் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

actor rahman rides himalayan 411

குறிப்பாக, 1999ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த சங்கமம் திரைப்படம் ரஹ்மானின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். அதன்பின், நடிகர் அஜித்குமார் உடன் பில்லா, சூர்யா உடன் சிங்கம் 2 உள்ளிட்ட திரைப்படங்களும் நடிகர் ரஹ்மானின் கேரியரில் சிறந்த திரைப்படங்களாகும். இருப்பினும், 2016இல் வெளிவந்த துருவங்கள் பதினாறு திரைப்படம் ரஹ்மானின் நடிப்பிற்கு சரியான தீனியாக அமைந்தது.

தமிழ், மலையாளம் என்று மட்டுமில்லாமல் தெலுங்கிலும் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரஹ்மான் கடந்த 2023ஆம் ஆண்டில் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்தார். மேலும், தொலைக்காட்சி சீரியல்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றிலும் நடித்துள்ள நடிகர் ரஹ்மான் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் ஒன்றை ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

actor rahman rides himalayan 411

இந்த வீடியோவில், ஹிமாலயன் பைக்கில் ரஹ்மான் அமர்ந்திருக்க, அவருக்கு உதவி செய்யவும், அவருடன் கலந்துரையாடவும் சிலர் சுற்றி இருக்கின்றனர். இவர்களுக்கு பின்னால் 2 ஜேசிபி வாகனங்களும் இருப்பதை பார்க்க முடிகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஏதோ படப்பிடிப்பு போன்று உள்ளது. ஆனால், எந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு என்பதை அறிய முடியவில்லை.

நடிகர் ரஹ்மான் அமர்ந்திருக்கும் ஹிமாலயன் பைக்கில் கேரள மாநில நம்பர் பிளேட் உள்ளதை வீடியோவில் காணலாம். ஆகையால், இது ஏதேனும் மலையாள திரைப்படத்திற்கான படப்பிடிப்பாக இருக்கலாம். இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில், "சிறப்பான பைக், முதல்முறையாக அதன் மீது. சிறந்த ஆஃப்-ரோடர், குறிப்பாக இந்த இடம் மிகவும் சோதித்தது. பைக் தேர்ச்சி பெற்றது" என நடிகர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

actor rahman rides himalayan 411

இவர் கூறுவதை போல, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் ஆனது இவ்வாறான அட்வென்ச்சர் பயணங்களுக்கு மிகவும் ஏற்ற பைக் ஆகும். புதிய ஹிமாலயன் 450 பைக் சமீபத்தில்தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த வீடியோவில் நடிகர் ரஹ்மான் பயன்படுத்தியது, அதற்கு முன்பே விற்பனையில் இருந்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 பைக் ஆகும்.

அதுமட்டுமின்றி, திரைப்படத்திற்காக இந்த ஹிமாலயன் 411 பைக்கில் சில மாற்றங்களை செய்துள்ளனர். ஆஃப்-ரோடு டயர்களையும், அதற்கேற்ப ஸ்போக் சக்கரங்களையும் பொருத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, பைக்கின் உடல் பகுதியில் சில வித்தியாசமான ஸ்டிக்கர்களையும் பார்க்க முடிகிறது. ஹிமாலயன் 411 பைக்கில் 411சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 பைக்கில் ரைடர் சீட் ஆனது 800மிமீ உயரத்தில் நன்கு உயரமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், முதல்முறையாக இந்த பைக்கை ஓட்டுவது போல் இல்லாமல், பல வருடம் ஓட்டிய அனுபவமிக்கவர் போன்று நடிகர் ரஹ்மான் வீடியோவில் மாஸ் காட்டியுள்ளார். இதற்கு முக்கிய காரணம், ரஹ்மான் அந்த அளவிற்கு உயரமானவராக உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2024, 14:47 [IST]
English summary
Sangamam movie actor rahman rides royal enfield himalayan 411 at shooting spot
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X