ஒரு காலத்துல இளைஞர்களின் கனவு கன்னியா இருந்தாங்க! ரெண்டரை கோடி ரூபா காரில் வந்து இறங்கியது அவங்களா!

இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று போர்ஷே கேயென்னே (Porsche Cayenne). தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை போர்ஷே கேயென்னே எஸ்டிடி (Porsche Cayenne STD) மற்றும் போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ் (Porsche Cayenne GTS) ஆகியவை ஆகும். இதில், எஸ்டிடி வேரியண்ட்டின் விலை 1.42 கோடி ரூபாயாக உள்ளது. மறுபக்கம் ஜிடிஎஸ் வேரியண்ட்டின் விலை 2 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இவ்வளவு விலை உயர்ந்த காரை இந்தியாவை சேர்ந்த ஒரு பிரபலம் தற்போது வாங்கியுள்ளார். அவர் ஒரு சமயத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஆவார். இதை படித்ததும், அனேகமாக அவர் இந்தியாவை சேர்ந்த ஏதேனும் ஒரு நடிகையாகதான் இருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்க கூடும்.

Sania Mirza Spotted In Porsche Cayenne GTS

ஏனெனில் பொதுவாக நடிகைகள் மட்டுமே கனவு கன்னி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். ஆனால் நடிகைகளை பற்றி தற்போது நாங்கள் பேசி கொண்டிருக்கவில்லை. மாறாக ஒரு விளையாட்டு வீராங்கனையை பற்றியே நாங்கள் பேசி கொண்டுள்ளோம். அவர் சானியா மிர்சா (Sania Mirza) ஆவார்.

இந்தியாவில் கனவு கன்னி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட முதல் விளையாட்டு வீராங்கனை அனேகமாக சானியா மிர்சாவாகதான் இருக்கும். உடை, திருமணம் உள்பட பல்வேறு விஷயங்களில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து, டென்னிஸ் களத்தில் இந்தியாவிற்கு பல பெருமைகளை தேடி தந்த புகழுக்கு உரியவர் சானியா மிர்சா.

Sania Mirza

இவர் தற்போது வாங்கியிருப்பது போர்ஷே கேயென்னே காரின் ஜிடிஎஸ் வேரியண்ட் ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே 2 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 2.50 கோடி ரூபாய் வரும்.

இவ்வளவு விலை உயர்ந்த காரை சானியா மிர்சா பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது. போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ் காரில் விமான நிலையம் ஒன்றுக்கு சானியா மிர்சா வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரின் ஆன்-ரோடு விலை சுமார் 2.50 கோடி ரூபாய் வரும் நிலையில், இந்த வீடியோவில் 2.29 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். இது சானியா மிர்சா வாங்கிய முதல் விலை உயர்ந்த கார் கிடையாது.

அவரிடம் ஏற்கனவே பல்வேறு விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கின்றன. இதில், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series), ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ (Jaguar XE) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த வரிசையில் அவரது கார் கலெக்ஸனில் (Car Collection) புதிதாக இணைந்துள்ள ஒரு கார்தான் போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சானியா மிர்சா தற்போது வாங்கியுள்ள போர்ஷே கேயென்னே ஜிடிஎஸ் காரானது, பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் (BMW XM), ஆடி ஆர்எஸ் க்யூ8 (Audi RS Q8), ஜாகுவார் எஃப்-பேஸ் (Jaguar F-Pace) மற்றும் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2025, 12:16 [IST]
English summary
Sania mirza spotted in porsche cayenne gts viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+