ரூ. 4.47 கோடி காரை வாங்கிய லியோ பட நடிகர்!.. நிஜ வாழ்க்கையிலும் மாஸ் காட்டிட்டு இருக்காரு!

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சஞ்ஜய் தத் ரூ. 4.47 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோ-பயோகிராஃபி (Land Rover Range Rover SV Autobiography) சொகுசு கார் மாடலையே அந்த நடிகர் வாங்கி இருக்கின்றார். தன்னுடைய 65 ஆவது பிறந்த நாளை முன்னிட்டே இந்த காரை அவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சொகுசு காரின் சிறப்பு வசதிகள் மற்றும் எஞ்சின் திறன் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

பாலிவுட் திரை உலகில் பழம் தின்னு கொட்டை போட்ட நடிகர்களில் ஒருவராக சஞ்ஜய் தத் அறியப்படுகின்றார். இதுவரை 135க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்திருக்கின்றார். இப்போதும் அவர் சில முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி வருகின்றார். அந்தவகையில், சமீபத்தில் லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக, மாஸ் ரோலில் அவர் நடித்திருப்பார்.

Sanjay dutt buys rs 4 47 cr car

இத்தகைய முன்னணி நடிகரே தன்னுடைய 65ஆவது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலான ரேஞ்ஜ் ரோவர்-இன் சிறப்பு பதிப்பான எஸ்வி ஆட்டோ-பயோகிராஃபி-யை அவர் வாங்கி இருக்கின்றார். இவரிடத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே தன்னுடைய சொகுசு கார்கள் கலெக்சனில் புதிதாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி ஆட்டோ-பயோகிராஃபியை இணைத்திருக்கின்றார். இந்த காரின் ஆரம்ப நிலை மாடல் ரூ. 2.50 கோடி என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், இதன் உச்ச நிலை மாடலோ ரூ. 4.47 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

Sanjay dutt buys range rover sv autobiography

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த கார் மாடலுக்கு அம்பானி போன்ற பணக்காரர்கள் தொடங்கி இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே சஞ்ஜய் தத் இந்த காரை வாங்கியிருக்கும் சம்பவம் அமைந்திருக்கின்றது.

இந்த காரில் சொகுசு வசதிகளும் மிக தாராளமாக இடம் பெற்றிருக்கும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் பஞ்சமில்லாமல் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே மினி உல்லாச கப்பலில் பயணிக்கும் அனுபவம் இந்த கார் ஒவ்வொரு முறையும் பயணிக்கும்போதும் கிடைக்கும். இதனால்தான் இந்திய பணக்காரர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாக ரேஞ்ஜ் ரோவர் இருக்கின்றது.

இந்த காரில் பிரீமியம் ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு பெரிய தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 24 வழிகளில் கூல் மற்றும் வெப்பமான உணர்வை மாற்றிக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இந்த இருக்கைககளில் மசாஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே, கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் பயணத்தின்போதே மசாஜ் மோடை ஆக்டிவேட் செய்துவிட்டு ஹாயாக பயணிக்கலாம். இதுமட்டுமில்லைங்க, கார் இணைப்பு அம்சம், பன்முக தொடுதிரைகள், ஃப்ளஷ் வகை கார் கதவு கை பிடிகள், ஹீட்டட் விண்ட்ஸ்கிரீன் ஆகிய அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுபோன்று சிறப்பம்சங்களில்தான் இந்த கார் மெய்சிலிர்க்கும் வகையில் இருக்கின்றது என பார்த்தால், எஞ்சின் விஷயத்திலும் இந்த கார் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையிலேயே இருக்கின்றது. ஆனால், இருப்பதிலேயே அதிக திறனை வெளியேற்றக் கூடிய மோட்டார் தேர்வாக 4.4 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 523 எச்பி மற்றும் 750 என்எம் டார்க்கை வெளியேற்றும். டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே அனைத்து வீல்களுக்கும் இயங்கு திறன் கடத்தப்படுகின்றது. இதுதவிர, இந்த கார் மாடலில் 3.0 லிட்டர் டீசல் போன்ற எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் ஸ்டைலான கருப்பு நிற ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி ஆட்டோ-பயோகிராஃபி கார் மாடலையே சஞ்ஜய் தத் வாங்கி இருக்கின்றார். இந்த காரில் கெத்தாக அவர் வலம் வரும் மற்றும் டெலிவரி வரும்போது அதனுடன் நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2024, 14:44 [IST]
English summary
Sanjay dutt acquires rs 4 47 crore worth range rover sv autobiography luxury car
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+