இந்தியால இல்ல காரை பார்க்க துபாய்க்கே கிளம்பி போய்ட்டாரு.. ஷோரூமை சுற்றி சுற்றி வந்த ஆண்டனி தாஸ்!

விஜய் நடிப்பில் வெளியாகிய லியோ படத்தில் ஆண்டனி தாஸ் எனும் மாஸான கேரக்டரில் தோன்றியவர் சஞ்சய் தத். முன்னணி பாலிவுட் திரை நட்சத்திரமான இவர், மிகப் பெரிய கார் காதலரும் ஆவார். இதற்கு அவரிடத்தில் இருக்கும் சூப்பர் மற்றும் அரிய வகை கார்களே முக்கிய சான்றாக இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, இப்போது மற்றுமொரு தரமான சம்பவத்தையும் அவர் செய்திருக்கின்றார். சமீபத்தில் துபாய்க்கு சென்ற அவர், அங்கேயும் தன்னுடைய கார்கள் மீதான காதலை வெளிக்காட்டி இருக்கின்றார். சஞ்சய் தத்-இன் மனைவி, பிள்ளைகள் என பலரும் துபாய் வசித்து வருகின்றனர். அவர்களை அவ்வப்போது சஞ்சய் தத் அங்கு பார்க்க செல்வது வழக்கம்.

Sanjay dutt visit dubai

அவ்வாறு இந்த முறை சென்ற போதே பிரபல ஆடம்பர கார் ஷோரூமுக்கு அவர் விசிட் கொடுத்து இருக்கின்றார். அது ஓர் பயன்படுத்திய கார்களை விற்பனைச் செய்யும் ஷோரூம் ஆகும். இந்த ஷோரூம் சஞ்சய் தத்-இன் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமானது என கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் அங்கு சென்று சில குறிப்பிட்ட கார்களை ஆசையுடன் தொட்டு பார்த்து வந்திருக்கின்றார். இரண்டு கார்களை அவர் அதிக ஆர்வத்துடன் பார்த்ததை நம்மால் இன்ஸ்டா வீடியோவில் பார்க்க முடிகின்றது. அதில் ஒன்று பென்ட்லீ பென்டேகா எஸ்யூவி ரக சொகுசு காராகும்.

Sanjay dutt

இதைத்தொடர்ந்து, ஃபெர்ராரி மற்றும் லம்போர்கினி ஆகிய கார்களையும் அவர் பார்த்து பூரிப்படைந்தார். மேலும், தான் ரசித்து பார்த்த கார்கள் அனைத்தையும் அவர் அவருடைய ஐ-ஃபோனில் படம் பிடித்தார். ஒருவேளை துபாயில் உள்ள யாருக்காவது அவர் பரிசளிக்க இவ்வாறு செய்திருக்கலாம் என யூகிக்க முடிக்கின்றது.

ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தில் வருவதைப் போலவே இங்கும் அவர் மாஸாக வலம் வந்திருக்கின்றார். இவர் வசிக்கும் மும்பை இல்லத்தில் ஏகப்பட்ட விலை உயர்ந்த மற்றும் ஆடம்பர வகை கார்கள் பயன்பாட்டில் உள்ளன. மிக முக்கியமாக சமீபத்தில் அவர் வாங்கிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் கார் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியது.

Sanjay dutt checks out bentley

ரூ. 2.70 கோடி தொடங்கி ரூ. 3.40 கோடி வரையிலான விலையில் இந்த சொகுசு கார் விற்கப்படுகின்றது. விலைக்கு ஏற்பவே சொகுசு வசதிகள் மிகவும் அதிகமாக அந்த காரில் இடம் பெற்றிருக்கும். சொல்லப் போனால் அந்த காரில் பயணிக்கும்போது கப்பலில் மிதந்துக் கொண்டிருப்பதைப் போன்ற அனுபவமே அதன் பயணிகளுக்கு கிடைக்கும். அத்தகைய மிகுந்த லக்சூரி அம்சங்கள் தாங்கியதே மேபேக் எஸ்-கிளாஸ் ஆகும்.

இதனால்தான், இந்த கார் இந்திய செல்வந்தர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இருக்கின்றது. இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் இன்னும் பல இந்திய நடிகர்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சஞ்சய் தத் இடம் இந்த விலையுயர்ந்த கார் மட்டுமில்லைங்க இதுபோன்று ஏகப்பட்ட கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

Sanjay dutt checks out luxury car show room

உதாரணமாக, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபி, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மற்றும் ஆடி க்யூ7 உள்ளிட்ட கார்களை எல்லாம் சஞ்சய் தத் பயன்படுத்தி வருகின்றார். இதேபோல், இவரிடத்தில் சூப்பர் கார்களும் கடந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

ஃபெர்ராரி 599 ஜிடிபி மற்றும் ஆடி ஆர்8 போன்ற கார்களை எல்லாம் அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதேபோல், டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 1200 மற்றும் ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் போன்ற சூப்பர் பைக்குகளையும் சஞ்சய் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாகவே சஞ்சய் தத் மிகப் பெரிய வாகன காதலராக அறியப்படுகின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வைத்திருப்பதைப் போலவே மிகப் பெரிய கார் கலெக்சனை சஞ்சய் தத் அவருடைய துபாய் இல்லத்தில் வைத்திருப்பார் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், அங்கு அவரிடத்தில் என்ன மாதிரியான கார்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது அறியப்படாத தகவலாக உள்ளது. இருப்பினும், சமீபத்திய செயலின் வாயிலாக இந்தியாவில் இருப்பதை போலவே அங்கும் மிக மிக விலை உயர்ந்த கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2023, 10:58 [IST]
English summary
Sanjay dutt visit exotic car s dubai and checks out bentley and ferrari
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X