கப்பல் போன்ற காரில் வந்து இறங்கியது இவ்வளவு பெரிய நடிகரா? மனைவி உடன் ஓர் ஜாலியான பயணம்!!
டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த கார் வெல்ஃபையர் (Vellfire) ஆகும். இருப்பினும், இந்த காரையும் நம் நாட்டில் செல்வந்தர்கள் நிறைய பேர் போட்டி போட்டு வாங்குகின்றனர். குறிப்பாக, சினிமா நட்சத்திரங்கள் (Cinema Stars) மத்தியில் வெல்ஃபையர் ஆனது பிரபலமானதாக விளங்குகிறது. அந்த வகையில், தற்போது ஒரு முன்னணி நடிகர் டொயோட்டா வெல்ஃபையர் காரை வாங்கியுள்ளார். யார் அவர் என்பதையும், அவர் வாங்கியுள்ள வெல்ஃபையர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சினிமா பிரபலங்கள் என்றாலே அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவர் என்பது நமக்கு தெரியும். குறிப்பாக, பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மாதத்திற்கு ஒரு பிராண்ட்-நியூ காரை வாங்குவதை நமது செய்தித்தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது விலையுயர்ந்த காரை வாங்கியிருக்கும் பாலிவுட் நடிகர், சஞ்சய் கபூர் (Sanjay Kapoor) ஆவார்.

சஞ்சய் கபூர், பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பிரபல சினிமா தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் (Boney Kapoor)-இன் இளைய சகோதரர், சஞ்சய் கபூர் ஆவார். மேலும், நடிகை ஷான்யா கபூரின் தந்தை தான் சஞ்சய் கபூர் ஆவார். 1990ஆம் காலக்கட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயனாக நடித்துள்ள சஞ்சய் கபூர் இப்போதும் திரைப்படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்துக் கொள்ளும் சஞ்சய் கபூர், இன்றைய கால டிரெண்டிற்கு ஏற்ப வெப் சீரிஸ் (Web Series)-களிலும் நடிக்கிறார். சஞ்சய் கபூரின் நடிப்பில் இந்த 2024ஆம் ஆண்டில் மெர்ரி கிறித்துமஸ், மர்டர் முபாராக் என்கிற 2 திரைப்படங்கள் திரைக்கு வந்தன. அதுமட்டுமின்றி, இந்த வருடத்தில் பிராண்ட்-நியூ டொயோட்டா வெல்ஃபையர் காரையும் நடிகர் சஞ்சய் கபூர் வாங்கியுள்ளார்.

அந்த காரில், மனைவி மஹீப் கபூர் உடன் மும்பை பந்த்ராவில் உள்ள ஓர் உணவகத்திற்கு சஞ்சய் கபூர் வந்திறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சஞ்சய் கபூரின் புதிய வெல்ஃபையர் கார் பளபளவென்று காட்சியளிக்கிறது. இதனால், இந்த காரை அவர் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்புதான் வாங்கியிருக்க கூடும்.
சஞ்சய் கபூரின் கார் கேரேஜில் (Car Garage)-இல் உள்ள மிகவும் விலையுயர்ந்த கார் இந்த டொயோட்டா வெல்ஃபையர் என கூறப்படுகிறது. டொயோட்டா வெல்ஃபையரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.5 கோடியில் இருந்து ஆரம்பிக்கின்றன. வெல்ஃபையர் காரின் விலைமிக்க விஐபி எக்ஸிக்யூட்டிவ் லவுஞ்ச் (VIP Executive Launge) வேரியண்ட்டை சஞ்சய் கபூர் வாங்கியுள்ளார்.

சஞ்சய் கபூரின் புதிய வெல்ஃபையர் கார் முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது. இதற்கேற்ப காரினுள் கேபின் சன்செட் பிரவுன் (Sunset Brown) நிறத்தில் உள்ளது. வெல்ஃபையர் ஆனது டொயோட்டாவின் லக்சரியான எம்பிவி (MPV) கார் ஆகும். அதாவது, அந்த அளவிற்கு பிரம்மாண்டமான காராக வெல்ஃபையர் விளங்குகிறது. இதனால், காரினுள் இருக்கை செட்-அப் ஆனது அதிக லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இடவசதி உடன் நன்கு விசாலமானதாக கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா வெல்ஃபையர் போன்ற காரை பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில், உள்ளே அதிக இடவசதி கிடைக்கும் என்றாலே தானாக நமக்கு ஒரு சவுகரியமான உணர்வு ஏற்படும். பாலிவுட் சினிமாவில் இந்த டொயோட்டா சொகுசு காரை அக்சய் குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனில் கபூர், அஜய் தேவ்கான் மற்றும் அமீர்கான் உள்பட பலர் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
