பத்தோட பதினொன்னா மெட்ரோல உக்காந்திருந்த மன்னர் குடும்பத்து வாரிசு! கூட போனவங்க இதை ஆயுசுக்கும் மறக்க மாட்டாங்க
இந்தியாவை சேர்ந்த செல்வந்தர்கள், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் (Luxury Cars), பெரும்பாலும் பயணம் செய்வார்கள். எனவே சாமானிய மக்கள் பயணம் செய்யும் பஸ்கள் (Buses) மற்றும் மெட்ரோ ரயில்கள் (Metro Trains) போன்ற வாகனங்களில் எல்லாம் அவர்களை காண்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம்.
அப்படிப்பட்ட அரிதான ஒரு விஷயம் தற்போது நடைபெற்றுள்ளது. மன்னர் பரம்பரையை சேர்ந்த நடிகை ஒருவர், மக்களுடன் மக்களாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். அவரை திடீரென நேரில் பார்த்ததும், பயணிகள் ஆச்சரியம் அடைந்து விட்டனர். அத்துடன் அவருடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

பயணிகளின் இந்த செல்ஃபி கோரிக்கைக்கு, அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவங்களை நமக்கு காட்டும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, சாரா அலி கான் (Sara Ali Khan) ஆவார்.
இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகளில் ஒருவர். இவரது தந்தை (Father) சயீஃப் அலி கானும் (Saif Ali Khan), பாலிவுட் நடிகர்களில் ஒருவர்தான். அத்துடன் சயீஃப் அலி கான் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் ஆவார். அந்த வழியில் வந்தவர்தான், சாரா அலி கான்.

இந்த வைரல் வீடியோவில், சாரா அலி கான் உடன், ஆதித்யா ராய் கபூரையும் (Aditya Roy Kapur) நம்மால் பார்க்க முடிகிறது. இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். சாரா அலி கான் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகிய இருவரும், மெட்ரோ... இன் டினோ (Metro... In Dino) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 4ம் தேதி (July 4) வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே சாரா அலி கான் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகிய இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதில் சாரா அலி கான் உண்மையிலேயே மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் ஆவார். அவரது கார் கலெக்ஸனே (Car Collection) இதற்கு சாட்சி. சாரா அலி கானிடம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350 (Mercedes Benz G350) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கவே செய்கின்றன.
கூடவே மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார் ஒன்றையும் சாரா அலி கான் வைத்துள்ளார். இதை அவர் வெறுமனே வீட்டில் நிறுத்தி வைத்திருக்கவில்லை. மும்பை (Mumbai) நகரின் பல்வேறு இடங்களுக்கு, மிகவும் எளிமையான மாருதி சுஸுகி ஆல்டோ காரில் வந்து செல்வதை, சாரா அலி கான் வழக்கமாகவும் வைத்துள்ளார்.
மறுபக்கம் ஆதித்யா ராய் கபூர், மிகவும் ஆடம்பரமான கார்களை, ஏராளமாக வைத்துள்ளார். இதில், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி எல்டபிள்யூபி (Land Rover Range Rover Autobiography LWB), பிஎம்டபிள்யூ 530டி (BMW 530d) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாரா அலி கான் மற்றும் ஆதித்யா ராய் கபூர் போன்ற பிரபலங்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருப்பது திரைப்பட ப்ரொமோஷன் பணிக்காக என்றாலும் கூட, ஒரு வகையில் இது நல்ல விஷயமே. ஏனெனில் பொதுமக்கள் மத்தியில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை இது ஏற்படுத்தலாம். இது இந்திய சாலைகளில் நிரம்பி வழியும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, போக்குவரத்து நெரிசல் பிரச்சனை குறைய உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications








