1,200 கோடி சொத்து இருக்கு! ஆனாலும் சாதாரண கார்ல ஹாஸ்பிட்டல் வந்தது அவங்களா! பெரிய ஆளா இருந்தாலும் பந்தாவே இல்ல

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சயீஃப் அலி கான் (Saif Ali Khan). மும்பையில் உள்ள இவரது வீட்டிற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் நுழைந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் அந்த மர்ம நபர், சயீஃப் அலி கானை கத்தியால் குத்தினார். இதனால் படுகாயம் அடைந்த சயீஃப் அலி கான் மும்பை (Mumbai) நகரில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் (Lilavati Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மும்பை காவல் துறை அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையை நடத்தி கொண்டுள்ளனர். இது தொடர்பாக காவல் துறை தரப்பில் கைது நடவடிக்கைகளும் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சயீஃப் அலி கான் தற்போது மெல்ல மெல்ல உடல் நலன் தேறி வருகிறார்.

Sara Ali Khan Spotted In Humble Honda CR-V

எனவே பாலிவுட் பிரபலங்கள் பலரும் மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு சென்று, நடிகர் சயீஃப் அலி கானை நலம் விசாரித்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனை தற்போது பாலிவுட் பிரபலங்கள் அதிகம் வந்து செல்ல கூடிய இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த சூழலில் சயீஃப் அலி கானின் மகளும், பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவருமான சாரா அலி கான் (Sara Ali Khan), லீலாவதி மருத்துவமனைக்கு வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Honda CR-V

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வைரல் வீடியோவில், சாரா அலி கான் ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) காரில் இருந்து இறங்கி, மருத்துவமனைக்குள் நுழைவதை நாம் காணலாம். இந்த வீடியோவில் நாம் பார்க்கும் ஹோண்டா சிஆர்-வி கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை.

கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பே இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்தபோது கடைசியாக 21.10 லட்ச ரூபாய் முதல் 32.77 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ஹோண்டா சிஆர்-வி கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சாரா அலி கான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை சயீஃப் அலி கானின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 1,200 கோடி ரூபாய். இதுதவிர சாரா அலி கானும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இருப்பினும் எளிமையான கார்களில் பயணம் செய்வதையே அவர் விரும்புகிறார். சாரா அலி கானிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350 (Mercedes Benz G350) போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கின்றன.

ஆனால் ஹோண்டா சிஆர்-வி போன்ற எளிமையான கார்களில் பயணம் செய்வதைதான் சாரா அலி கான் விரும்புகிறார். இன்னும் சொல்லப்போனால் இதை விட மிகவும் எளிமையான காராக கருதப்படும் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரில் கூட சாரா அலி கானை அடிக்கடி பார்க்க முடியும். ஜிம் போன்ற இடங்களுக்கு மாருதி சுஸுகி ஆல்டோ காரில் வந்து சாரா அலி கான் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பாலிவுட் திரையுலகில் தற்போதைய நிலையில் மிகவும் எளிமையான கார்களை மிகவும் அதிக அளவில் பயன்படுத்தும் நடிகைகளில் ஒருவராக சாரா அலி கான் உள்ளார். இது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Monday, January 20, 2025, 18:00 [IST]
English summary
Sara ali khan spotted in humble honda cr v in mumbai lilavati hospital viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+