மிடில் க்ளாஸ் மக்களின் கார்ல போன மன்னர் பரம்பரை வாரிசு! நேர்ல பாத்ததும் போட்டோ எடுக்க பெரிய கூட்டமே கூடிருச்சு
இந்தியாவில் திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் திரையுலக நட்சத்திரங்களின் முதல் சாய்ஸ். மிகவும் வசதியானவர்கள் என்றால், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களில் அடிக்கடி பயணம் செய்வதை காண முடியும். ஆனால் ஒரு நடிகை மட்டும் விதிவிலக்காக மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) மற்றும் ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) போன்ற மிகவும் எளிமையான கார்களில் வலம் வந்து கொண்டுள்ளார்.
இத்தனைக்கும் அவர் ஒன்றும் சாதாரண நடிகை எல்லாம் கிடையாது. இந்தியா முழுக்க பிரபலமான இந்த நடிகைக்கு, மன்னர் குடும்பத்தின் வாரிசு என்ற பெருமையும் உள்ளது. இருப்பினும் எளிமையான கார்களை பயன்படுத்துவதையே அவர் அதிகம் விரும்புகிறார். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புமான் இந்த செய்தி.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், பிரபல நடிகை ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து வெளியே வந்து ஹோண்டா சிஆர்-வி காரில் ஏறி பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. அப்போது போட்டோ, வீடியோ எடுக்க பலரும் சாரா அலி கானை சூழ்ந்து கொண்டனர். இது மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.
இந்த வீடியோவில் நீங்கள் காணும் நடிகை சாரா அலி கான் (Sara Ali Khan) ஆவார். இவர் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அதே பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவரும், மன்னர் பரம்பரையை சேர்ந்தவருமான சயீஃப் அலி கானின் (Saif Ali Khan) மகள்தான் இந்த சாரா அலி கான்.

இவர் தற்போது பயன்படுத்தியுள்ள ஹோண்டா சிஆர்-வி காரானது, அவர்களை பொறுத்தவரை மிகவும் எளிமையான ஒன்றுதான். ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 3 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அவை ஹோண்டா அமேஸ் (Honda Amaze), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் ஹோண்டா சிட்டி (Honda City) ஆகியவை ஆகும்.
சாரா அலி கான் பயன்படுத்திய ஹோண்டா சிஆர்-வி கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. ஏற்கனவே இதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் கடைசியாக விற்பனையில் இருந்தபோது 21.10-32.77 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ஹோண்டா சிஆர்-வி கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
1.6 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் எல்லாம் இந்த காரில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் போட்டி மாடல்களுடன் ஒப்பிடும்போது விற்பனை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால், ஹோண்டா நிறுவனம் சிஆர்-வி காரின் விற்பனையை நிறுத்தி விட்டது.
இருப்பினும் ஒரு சில வாடிக்கையாளர்கள் இன்னமும் ஹோண்டா சிஆர்-வி காரை பயன்படுத்தி வருகின்றனர். இதில், சாரா அலி கானும் ஒருவராக உள்ளார். இவர் இந்த காரை பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. மும்பை நகரின் பல்வேறு இடங்களுக்கும் அவர் இந்த காரில்தான் சென்று வந்து கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தந்தை சயீஃப் அலி கான் கத்தி குத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரை காண்பதற்கு கூட சாரா அலி கான் இதே ஹோண்டா சிஆர்-வி காரில்தான் மருத்துவமனைக்கு வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக இருந்தாலும் கூட, பாலிவுட் நடிகை சாரா அலி கான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர் பயன்படுத்தும் ஆல்டோ, சிஆர்-வி கார்களின் மூலமாகவே நம்மால் அதை அறிந்து கொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications








