காஸ்ட்லியான காரில் ஏறி சென்றது இவரின் மாமியாரா? அந்த பொண்ண பார்த்ததுமே தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு
இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்தவர் சச்சின் தென்டுல்கர், இவர் உலகம் முழுவதும் புகழ் பெற்றவராக இருக்கிறார். தற்போது இவரது மகள் சாரா தனது தாத்தா பாட்டியின் கையை பிடித்துக்கொண்டு காரில் கொண்டு ஏற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலருக்கு இந்த வீடியோவில் இருக்கும் தாத்தா பாட்டி யார் என்று தெரியவில்லை. இது மட்டுமல்ல இவர்கள் பயணம் செய்த காரும் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்வானாக இருந்தவர் சச்சின் தெண்டுல்கர். இவர் கிரிக்கெட் விளையாடியபோது செய்த பல சாதனைகள் இன்னும் முறியடிக்க முடியாததாக இருக்கிறது. இன்று இவர் கிரிக்கெட்டின் மறக்கமுடியாத நாயகனாகவே இருக்கிறார். இந்நிலையில் இவரது மகள் மற்றும் மனைவி ஆகியோர் வயதான தம்பதியினரை கையை பிடித்து காரில் ஏற்றும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் வயதான தம்பதியினர் யார் என பலர் தேடி வருகின்றனர்.

இந்த வீடியோவில் இருப்பது சச்சின் மனைவி அஞ்சலியின் பெற்றோர் ஆவர். அதாவது அஞ்சலியின் தந்தை ஆனந்த் மேத்தா மற்றும் அவரது மனைவி அனபெல் மேத்தா ஆகியோரை தான் சாரா தென்டுல்கர் கையை பிடித்து கூட்டி சென்று காரில் ஏற்றுகிறார். அதாவது இந்த வயதான தம்பதியினர் சச்சினின் மாமனார் மற்றும் மாமியார் ஆவர்கள். இவர்கள் சென்ற காரும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவின்படி இவர்கள் ஏறி சென்றது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சிரீஸ் கார் ஆகும். இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ49 லட்சம் முதல் ரூ61 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது.இந்த கார் மொத்தம் 9 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. மொத்தம் 8 கலர் ஆப்ஷன்களும் இந்த காரில் உள்ளன.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் பெட்ரோல் இன்ஜின் 188 பிஎச்பி பவரையும், டீசல் இன்ஜின் 255 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 400 என்எம் என்ற அதிகபட்ச டார்க்கை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சிறப்பு அம்சமே இதில் உள்ள சொகுசு வசதி தான். வயதானவர்கள் செல்லும் போது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த காரில் கிடைக்கும். காருக்குள் வெளியில் இருக்கும் எந்த சத்தமும் கேட்காமல் அமைதியாக இருக்கும். சொகுசு மற்றும் வசதிகள் எல்லாம் இந்த காரில் டாப் கிளாஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த காரின் ஃபெர்பார்மென்ஸூம் சிறப்பாக இருக்கும். ஸ்மூத்தான ரைடிங் அனுபவம் கிடைக்கும்.

மேலும் இந்த காரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு, இது பெரும்பாலானோருக்கு பிரச்சனையாக இருந்தாலும் வயதானவர்கள் காரில் ஏறவும் இறங்கவும் வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே வயதானவர்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்குவார்கள். அதே நேரம் சிறப்பான சாலைகளில் இந்த கார் மிகச்சிறப்பாக ஃபெர்பார்மென்ஸ் செய்யும். இது மிகப்பெரிய அளவில் பலருக்க பயனுள்ளதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வயதானவர்கள் பயணிக்கும் காஸ்ட்லியான கார்கள் குறித்து பலருக்கு தெரியவில்லை. சச்சின் தென்டுல்கர் தனது மாமனார் மாமியாருக்கு வசதியாக பயணிக்க இப்படி ஒருகாரை ஏற்பாடு செய்துள்ளார் என்பது அவர் எந்த அளவிற்கு குடும்பத்தினரிடம் அக்கறையாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. இனி பல வயதான தம்பதியினர் இந்த காரை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









