அந்த கோடீஸ்வர குடும்பத்தின் ஒரே பெண் வாரிசா இது! கேமராவ பாத்ததும் டக்குனு ஓடி போய் கோடி ரூபா கார்ல ஏறீட்டாங்க!
பிஎம்டபிள்யூ கார்கள் (BMW Cars) என்றால், யாருக்குதான் பிடிக்காது? பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ள கார்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) திகழ்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் கிடைக்கிறது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 74.40 லட்ச ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) சுமாராக 95 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.
பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் (Ranveer Singh), இம்ரான் ஹாஸ்மி (Emraan Hashmi) மற்றும் டைகர் ஷெராஃப் (Tiger Shroff) உள்ளிட்டவர்களிடம் எல்லாம் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் உள்ளது. அப்படி இருக்கும்போது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் (Sachin Tendulkar) மட்டும் இல்லாமல் இருக்குமா என்ன?

சச்சின் டெண்டுல்கர்தான் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர் (Brand Ambassador) ஆவார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து, பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் இருந்து வருகிறார். 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னமும் இந்த கூட்டணி தொடர்கிறது.
சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர் மட்டுமல்ல. ரசிகரும் கூட. அவரிடம் பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 760 எல்ஐ (BMW 7 Series 760 Li), பிஎம்டபிள்யூ எம்6 க்ரான் கூபே (BMW M6 Gran Coupe), பிஎம்டபிள்யூ எம்5 30 ஜாகரே (BMW M5 30 Jahre), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம்50டி (BMW X5 M50d) உள்ளிட்ட கார்களெல்லாம் உள்ளன.

இந்த வரிசையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் ஒன்றும் அவரிடம் இருக்கிறது. இந்த காரை சச்சின் டெண்டுல்கரின் ஒரே மகளான சாரா டெண்டுல்கர் (Sara Tendulkar) பயன்படுத்தி வருகிறார். எனவே மும்பையின் (Mumbai) பல்வேறு இடங்களில் அடிக்கடி அவரை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் பார்க்க முடியும்.
இந்த வரிசையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை சாரா டெண்டுல்கர் பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் சாரா டெண்டுல்கர் நடந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது ஒரு சிலர் அவரை செல்போனில் வீடியோ எடுக்கின்றனர்.
இதன் பின் அவர் ஓடி சென்று காரில் ஏறி கொள்கிறார். பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், இலுமினேட்டட் கிட்னி க்ரில், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் 19 இன்ச் எம் அலாய் வீல்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படுவது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் லாங் வீல் பேஸ் வெர்ஷன் ஆகும். லாங் வீல் பேஸ் கார்களில் நிறைய சாதகமான அம்சங்கள் உள்ளன. கேபின் விசாலமானதாக இருக்கும் என்பதுதான் இதன் முதல் நன்மை. குறிப்பாக பின் இருக்கை பயணிகளுக்கு லெக்ரூம் அதிகம் இருக்கும் என்பதால், சௌகரியமாக பயணம் செய்யலாம்.
லாங் வீல் பேஸ் கார்களில், ஆக்ஸில்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருக்கும். எனவே குண்டும், குழியுமான சாலைகளில் பயணம் செய்தாலும், அதை உணர்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாக பயண அனுபவம் 'ஸ்மூத்' ஆக இருக்கும். எனவே லாங் வீல் பேஸ் கொண்ட கார்களுக்கு சந்தையில் 'டிமாண்ட்' அதிகம்.
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இது டர்போ இன்ஜின் என்பதால், செயல்திறன் சிறப்பாக இருக்கும். ஒட்டுமொத்தத்தில் சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவையாக பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசான பயண அனுபவத்துடன், செயல்திறன் மிக்க ஒரு காரை எதிர்பார்க்க கூடிய செல்வந்தர்களுக்கு, சாரா டெண்டுல்கர் பயன்படுத்தி வரும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5 சீரிஸ் கார் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








