சொந்தமா காசு கொடுத்து வாங்கினால் பல லட்சம் செலவாகும்.. மாருதி கார் பரிசை பெற எல்லா தகுதியும் இவர்கிட்ட இருக்கு

பாட்டு பாடும் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றதன் மூலம் ஏறக்குறைய சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மாருதி காரை தட்டி சென்றுள்ளார் ஓர் இளம்பெண். யார் அவர்? எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது? அவர் பெற்றுள்ள மாருதி காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு கார் & பைக்குகள் பரிசாக வழங்குவது கடந்த பல வருடங்களாகவே நடக்கக்கூடிய ஒன்றுதான். நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியாளர்களின் பெயர்களும், பரிசாக வழங்கப்படும் கார்களும் மட்டுமே மாறியுள்ளன. நிகழ்ச்சியில் பட்டத்தை வெல்லும் போட்டியாளர்களுக்கு வாகனங்கள் பரிசாக வழங்கப்படுவதை இப்போதும் மக்கள் ஆர்வமாக பார்க்கத்தான் செய்கின்றனர்.

saregamapa winner gets grand vitara

இதனால், தொலைக்காட்சி நிறுவனங்களும் குறைந்தது ஒரு நிகழ்ச்சியில் ஆவது கார் & பைக்கை பரிசாக வழங்குவதை தொடர்கின்றன. இந்த வகையில், கன்னட மொழியில் ஜீ நிறுவனம் நடத்தும் சரிகமப நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற இளம்பெண்ணுக்கு மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஜீ கன்னடா தொலைக்காட்சியில் வெளிவரும் சரிகமப நிகழ்ச்சியின் 20வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. ஆம், சுமார் 20 வருடங்களாக இந்த பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 20வது சீசனின் இறுதிச்சுற்றில் மைசூரை சேர்ந்த அமுல்யா வெற்றிப் பெற்று போட்டியின் டைட்டிலை வென்றுள்ளர். அமுல்யாவுக்கு பரிசு பொருட்களுடன் சேர்த்து, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

saregamapa winner gets grand vitara

சரிகமப சீசன் 20-இன் இறுதிச்சுற்று போட்டியை பாடகர்கள் விஜய் பிரகாஷ், ராஜேஷ் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பார்வையிட்டனர். மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹைப்ரீட் காராக கிராண்ட் விட்டரா விற்பனை செய்யப்படுகிறது. சிக்மா, டெல்டா மற்றும் ஸீட்டா என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் இந்த மாருதி கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த வேரியண்ட்டில் கிராண்ட் விட்டாரா காரை அமுல்யா பெற்றுள்ளார் என்பது தெரியவில்லை.

அதேபோல், எந்த நிறத்தில் கிராண்ட் விட்டாரா கார் அமுல்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை. ஏனெனில், வெற்றி பெற்ற பின் நிகழ்ச்சி மேடையில் காரின் சாவி மட்டுமே அமுல்யாவிடம் கொடுக்கப்பட்டது. கிராண்ட் விட்டாரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.80 லட்சம் - ரூ.20.09 லட்சம் வரையில் உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இது ஹைப்ரீட் கார் ஆகும்.

saregamapa winner gets grand vitara

1.5 லிட்டர் மைல்ட்-ஹைப்ரீட் பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்ட்ராங்க் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன்களில் கிராண்ட் விட்டாரா கார் கிடைக்கிறது. அத்துடன், இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் இ-சிவிடி உள்ளிட்டவை இந்த காரில் கொடுக்கப்படுகின்றன.

கிராண்ட் விட்டாராவின் சில வேரியண்ட்கள் முன் சக்கரங்களில் இயங்கக்கூடியதாகவும், சில வேரியண்ட்கள் ஒரே நேரத்தில் அனைத்து சக்கரங்களிலும் இயங்கக்கூடியதாகவும் உள்ளன. கிராண்ட் விட்டாராவில் முக்கியமான சிறப்பம்சங்களாக, 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே கொடுக்கப்படுகின்றன.

saregamapa winner gets grand vitara

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை சற்று அதிகமாக இருப்பினும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார்களை நிறைய பேர் வாங்குகின்றனர். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களுள் ஒன்று கிராண்ட் விட்டாரா ஆகும். அத்தகைய கார் பரிசாக கிடைத்தால், நிச்சயமாக யாராக இருந்தாலும் மகிழ்ச்சி அடைவர். இது அமுல்யாவின் திறமைக்கு கிடைத்த பரிசு.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 18:04 [IST]
English summary
Saregamapa season 20 winner gets maruti suzuki grand vitara check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X