இந்தியாவில் பறக்கப்போகுது ஏர் டாக்ஸி! அதுவும் இந்த ஊர்லயா?
இந்தியாவில் சர்லா ஏவியேசன் நிறுவனம் வரும் 2028ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸியை பயன்பாட்டிற்கு கொண்ஐடு வர திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான சோதனைகளை தற்போது துவங்கிவுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் இந்தியாவில் ஏர்டாக்ஸி சேவை துவங்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விாிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக பல்வேறு வழிகளை பல நிறுவனங்கள் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்காலத்தில் ஏர் டாக்ஸி சேவை எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட சர்லா ஏவியேசன் நிறுவனம் இந்தியாவில் ஏர்டாக்ஸி தயாரிப்பை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஏர்டாக்ஸிக்காக தயரிக்கப்பட்ட பறக்கும் வாகனங்கள் இதுவரை கிரவுண்டில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இது அடுத்த கட்ட சோதனைக்கு நகர தயாராகி விட்டது.
இது வரை சிறிய அளவில் ஒரு பறக்கும் வாகனத்தை உருவாக்கி சோதனை செய்து வந்தனர். இனி ரியல் சைஸில் அதை தயாரித்து சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் அதற்கான ஏற்பாடுகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. ரியல் சைஸ் பறக்கும் டாக்ஸிகளை உருவாக்கி அதை படிப்படியாக பறக்க வைத்து சோதனை செய்யவுள்ளனர். இது விமானம் போன்ற அமைப்பில் இருந்தாலும். ஹெலிகாப்டர் போல டேக் ஆஃப் ஆகும் திறன் கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது.
இதற்காக தயாரிக்கப்படும் பறக்கும் டாக்ஸி 7.5 மீட்டர் நீளம் கொண்ட இறகு அமைப்பில் இருக்கலாம். இதற்காக பெங்களூருவில் சோதனை மையங்களை அதன் தயாரிப்பு ஆலையிலேயே திறக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த பறக்கும் டாக்ஸி அக்டமிக் புரோட்டோ டைப், ஆர்சி அளவிலான விமானங்கள் போல இல்லாமல் இது சான்ற பெறதாக வடிவமைக்கப்படுகிறது. ஒரு முழு விமானம் என்பது 15 மீட்டர் றெக்கை கொண்டது. அதில் பாதியாக 7.5 மீட்டர் றெக்கையுடன் இது வடிவமைக்கப்படுகிறது.
சோதனைக்கான அனுமதி பெறப்பட்டதா என்ன விதமான சோதனை நடத்தப்படுகிறது என்ற தகவல் இல்லை ஆனால் தனியார் இடத்திற்குள் முதற்கட்ட சோதனை துவங்கும் என எதிர்பார்க்கலாம். அதன் பிறகு தற்போது ஹெலிகாப்டர் பயிற்சி வழங்கப்படும் இடத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி போல இது நடத்தப்பட வாய்ப்புள்ளது. பின்னர் படிப்படியாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வகையில் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை வரும் 2028ம் ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அதற்கான சட்டங்களும் சாத்தியங்களும் இல்லை. இந்திய சட்டப்படி இதற்கான சட்டப்பூர்வ அனுமதிகள் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் எதிர்கால தேவையை கருதி இது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பறக்கும் கார்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இ்நத கார் நிச்சயம் மிகப்பெரிய புரட்சியை செய்யும் பெங்களூருவில் இது முதலில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். ்அதிக போக்குவரத்து நெருக்கடி கொண்ட நகரங்களுக்கு இது நிச்சயம் மிகப்பெரிய தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








