"அவசரம் இது எம்எல்ஏ கார்" - இளைஞர்கள் அட்ராசிட்டி.. அசராமல் ஆப்பு வைத்த டெல்லி போலீஸ்..

எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தேசிய ஊரடங்கு உத்தரவை சீர்குலைத்த இளைஞர்களுக்கு அதிரடி நடவடிக்கை மூலம் டெல்லி போலீஸ் ஆப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மிக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கொண்டுவரப்பட்டுள்ள ஒரு சில நடவடிக்கைகள் நாட்டு மக்களை மிகவும் இக்கட்டான சூழலுக்கு தள்ளியிருக்கின்றது. அதிலும், குறிப்பாக அடித்தட்டு மக்களை மிகவும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. தற்போது தேசிய அளவில் நிலவும் ஊரடங்கு உத்தரவே மக்களின் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஏறக்குறைய நாட்டின் அனைத்து மாநிலங்களும் அதன் எல்லைகளை மூடிவிட்டன. குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்டிருக்கும் மாவட்டங்கள் அதி தீவிர கண்கானிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதனால், சாலைகள் முன்பெப்போதும் இல்லாத அளவில் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இதனை உறுதிச் செய்யும் வகையில் போலீஸார் மிகக் கடுமையான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் நகர்புறங்கள் போன்ற பகுதிகளில் சுமார் 100 அல்லது 200 அடிகளுக்கும் குறைவாக ஓர் தடுப்புகளை எழுப்பி ஆய்வு பணிகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஆகையால், மக்களால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் வெளியே வர முடியாத சூழல் காணப்படுகின்றது.

எனவே, பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் மட்டும் அரசின் தேசிய ஊரடங்கு குறிக்கோளை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையில் சாலையில் உலா வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதில், ஒரு சிலர் போலீஸாரை ஏமாற்றி சாலையில் உலா வருவதற்காக சமூக விரோத செயல்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர்.

அந்தவகையிலான ஓர் சம்பவம் தற்போது வட இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் வெள்ளை நிற டொயோட்டா பார்ச்சூனர் காரில் எம்எல்ஏ என ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு இளைஞர்கள் இருவர் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் உலா வந்துள்ளனர்.

போலீஸாரின் கண்களில் இருந்து தப்பிப்பதற்காகவே அந்த காரில் எம்எல்ஏ என ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், முன்னதாக தாங்களை எம்எல்ஏவின் உறவினர்கள் என்று அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். மேலும், அவரே நாங்கள் இதுபோன்று வலம் வருவதற்காக ஸ்பெஷல் பாஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், எம்எல்ஏவின் பெயர் போன்றவற்றை அவர்கள் கூறவில்லை. மேலும், போலீஸாரின் சில கேள்விகளுக்கு அந்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தபட்ட காரின் புகைப்படம்..

ஆகையால், இளைஞர்களின் இந்த சமூக விரோத செயலுக்கு தக்க தண்டனையளிக்கும் விதமாக ரூ. 10,500-க்கான அபராத செல்லாணை போலீஸார் வழங்கினர்.

இந்த சம்பவம் தலைநகர் டெல்லியை அடுத்துள்ள ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் குருகிராமில் இருந்து டெல்லிக்கு செல்வதற்காக பயணித்தபோதே போலீஸாரிடம் பிடிபட்டனர்.

கண்களுக்கு புலப்படாத வில்லானாக இருக்கும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பது மக்கள் ஒவ்வொருவரின் கட்டாய கடமையாக இருக்கின்றது. இது ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகையால், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றது.

ஆனால், ஒரு சிலர் தங்களுக்கு ஊர் சுற்றுவதற்காகவே விடுமுறை அளித்திருப்பதாக எண்ணி இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் மட்டுமின்றி அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.

ஆகையால், விதிமீறுவோர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. அதன்படி, அபராதம் வழங்குதல் மற்றும் லத்தி சார்ஜ் செய்தல் போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அது செய்து வருகின்றது.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தேசிய ஊரடங்கு உத்தரவை சீர்குலைத்த இளைஞர்கள் ஓட்டி வந்தது பார்ச்சூனர் கார் ஆகும். பார்ச்சூனர் காரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் டொயோட்டா நிறுவனம், அலுங்காமல், குலுங்காமல் பயணம் செய்ய புதிய வெல்ஃபயர் சொகுசு காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

இந்திய சொகுசு எம்பிவி கார் மார்க்கெட்டில் அசரடிக்கும் அம்சங்களுடன் புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் களமிறக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

சொகுசு எம்பிவி கார்

சொகுசு எம்பிவி கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த ரகத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் மற்றும் பட்ஜெட் குறைவான சொகுசு ரகத்தில் கியா கார்னிவல் மாடல்கள் அடுத்தடுத்து இந்திய சந்தையில் வந்துள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

விலை உயர்ந்த மாடல்

இந்த சூழலில், இன்னோவா மூலமாக இந்திய எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் டொயோட்டா நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முயற்சியாக வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை இன்று இந்திய சந்தையில் களமிறக்கி உள்ளது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள டெயோட்டா அல்ஃபார்டு காரின் விலை உயர்ந்த மாடலாக வெல்ஃபயர் இருந்து வருகிறது.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

வேரியண்ட் விபரம்

இதில், டொயோட்டா வெல்ஃபயர் காரின் எக்ஸிகியூட்டிவ் லான்ச் என்ற ஒரே வேரியண்ட்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த சொகுசு எம்பிவி காரின் மிக முக்கிய அம்சமாக இதன் மத்திய வரிசை இருக்கைகளை கூறலாம்.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

இருக்கை வசதி

மிக விசாலமான இந்த எம்பிவி கார் மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் 6 பேர் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும். இதில், பெரும் பணக்காரர்கள், அடிக்கடி வெளியூர் செல்லும் தொழிலதிபர்கள் விரும்பும் வகையில் நடுவரிசையில் சாய்மான வசதியுடன் கூடிய இரண்டு சொகுசு இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

புஷ்பேக் கேப்டன் இருக்கைகள்

தலை, கைகள், கால்களை ஓய்வாக வைத்துக் கொண்டு பயணிப்பதற்கு ஏதுவாக ஹெட்ரெஸ்ட், ஆர்ம்ரெஸ்ட் மற்றும் லெக் ரெஸ்ட் ஆகியவை இந்த இருக்கைகளில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான உணர்வையும், வெயில் காலத்தில் குளிர்ச்சியை தரும் வகையிலான தொழில்நுட்பத்தையும் இந்த இருக்கைகள் பெற்றிருக்கின்றன. இந்த காரில் மடக்கி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட டேபிள்களும் உள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

டிசைன்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் சொகுசு மினி வேன் போன்ற தோற்றத்துடன் வசீகரமாக உள்ளது. இந்த காரின் முன்புறம் க்ரோம் பட்டைகளுடன் கூடிய க்ரில் அமைப்பு, வலிமையான பம்பர், ஸ்பிளிட் அமைப்புடன் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்வேளை விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

அழகிய அலாய் வீல்கள், ஸ்லைடிங் முறையில் திறக்கும் கதவுகள், பெரிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் மிக வசீகரமாக இருக்கிறது. பார்த்த உடன் கவரும் டிசைனில் இந்த கார் இருப்பது பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக கூறலாம்.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் 10 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மற்றொரு 13 அங்குல திரையானது வைஃபை மற்றும் HDMI போர்ட் இணைப்பு வசதியுடன் வந்துள்ளது.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

சிறப்பம்சங்கள்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் பின் இருக்கை பயணிகளுக்கு டிவி திரை, டியூவல் சன்ரூஃப், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஆம்பியன்ட் ரூஃப் லைட் சிஸ்டம், 17 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த சொகுசு எம்பிவி காரில் பார்க்கிங் அசிஸ்ட், 7 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க புதிய வெல்ஃபயர் சொகுசு கார்... டொயோட்டா அறிமுகம்!

ஹைப்ரிட் தொழில்நுட்பம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரில் பெட்ரோல் மற்றும் மின் மோட்டார்களில் இயங்கும் ஹைப்ரிட் வகை வாகனமாக வந்துள்ளது. இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோ்ல எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 198 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஒவ்வொரு ஆக்சிலிலும் தலா ஒரு மின் மோட்டார் உள்ளது.

மின் மோட்டார்கள் திறன்

முன்புற ஆக்சிலில் உள்ள மின் மோட்டார் அதிகபட்சமாக 142 பிஎஸ் பவரையும், பின் ஆக்சிலில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார் 68 பிஎஸ் பவரையும் வழங்க வல்லது. இந்த காரின் பேட்டரி வாகனம் இயங்கும்போதே சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது.

மைலேஜ்

இதில் எலெக்ட்ரானிக் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த பிரம்மாண்ட எம்பிவி கார் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் மூலமாக இந்த சிறப்பான மைலேஜ் சாத்தியமாகும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வண்ணங்கள்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் பர்னிங் பிளாக், பியர்ல் ஒயிட், பிளாக் மற்றும் கிராஃபைட் ஆகிய 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அதேபோன்று, உட்புறத்தில் பிளாக்கென் என்ற மஞ்சள் வண்ணம் அல்லது கருப்பு வண்ண இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

விலை விபரம்

புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் ரூ.79.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது அறிமுகச் சலுகை விலையாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று லாட்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 180 கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக டொயோட்டா தெரிவிக்கிறது.

Image Source: Amar Ujala

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sarurpur Police Station Cops Busted Toyota Fortuner With MLA Sticker. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X