அம்மாவின் ஆஸ்தான கார்கள்: சிறப்பு பகிர்வு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார்களை அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சசிகலா பயன்படுத்த துவங்கி உள்ளார்.

இந்திய அரசியலில் தெளிவும், துணிவும் மிகுந்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தையும், ஸ்திரமற்ற சூழலையும் உருவாக்கிவிட்டது.

 அம்மா கார்களும் இப்போது சின்னம்மாவுக்கே?

இந்த நிலையில், நடிகையான காலத்தில் இருந்து அரசியலில் உச்சத்தை பெற்றது வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசை ஆசையாய் பல ரகமான கார்களை வாங்கி பயன்படுத்தினார். அந்த கார்களை பயன்படுத்தி தூக்கி போடாமல், அதனை பொக்கிஷமாக கருதி பாதுகாத்து வந்தார்.

 01. அம்பாசடர்

01. அம்பாசடர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் 1980ம் ஆண்டு அம்பாசடர் கார் ஒன்று இருந்தது. ஆர்கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது இந்த காரின் மதிப்பு ரூ.10,000 என தெரிவிக்கப்பட்டு இருந்தது. காரின் விலை மதிப்பு குறைவாக இருந்தாலும், அதனை பொக்கிஷமாக கருதி வைத்திருந்தார்.

 02. ஸ்வராஜ் மஸ்தா மேக்ஸி

02. ஸ்வராஜ் மஸ்தா மேக்ஸி

1988ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஸ்வராஜ் மஸ்தா மேக்ஸி மினி பஸ் மாடல் ஒன்றும் ஜெயலலிதாவிடம் இருந்தது. இந்த மினி பஸ்சின் மதிப்பு ரூ.10,000 என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

03. டெம்போ ட்ராக்ஸ்

03. டெம்போ ட்ராக்ஸ்

1989ம் ஆண்டு டெம்போ ட்ராக்ஸ் எஸ்யூவி ஒன்றும் அவரது பெயரில் இருக்கிறது. அந்த எஸ்யூவியின் தற்போதைய மதிப்பு ரூ.30,000 என தெரிவிக்கப்பட்டது.

 04. கான்டெஸ்ஸா கார்

04. கான்டெஸ்ஸா கார்

1990ம் ஆண்டு கான்டெஸ்ஸா கார் ஒன்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்தது. அந்த காலத்தின் மிக பிரலபமான சொகுசு கார் மாடலாக இருந்த இந்த காரையும் ஜெயலலிதா பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்த காரின் சந்தை மதிப்பு ரூ.5,000 என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 05. மஹிந்திரா பொலிரோ

05. மஹிந்திரா பொலிரோ

இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடலாக இருந்த மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி ஒன்றையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாங்கி பயன்படுத்தி வந்தார். 2000ம் ஆண்டு தயாரிப்பு மாடலான இந்த எஸ்யூவியின் மதிப்பு ரூ..80,000 என்று தெரிவிக்கப்பட்டது.

 06. டெம்போ டிராவலர்

06. டெம்போ டிராவலர்

அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு டெம்போ டிராவலர்தான் ஆஸ்தான வாகனம். எனவே, அரசியலில் உச்சத்தை பெற்ற தலைவரான ஜெயலலிதா சொந்தமாக டெம்போ டிராவலர் வேன் ஒன்றை வாங்கி பயன்படுத்தினார். அந்த காரின் மதிப்பு ரூ.80,000 என்று தெரிவிக்கப்பட்டது. இனி இந்த காரை சசிகலா பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

 07. மஹிந்திரா ஜீப்

07. மஹிந்திரா ஜீப்

இந்தியர்களின் மிக பிரியமான ஆஃப்ரோடு வாகனமாக விளங்கும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் ஒன்றும் ஜெயலலிதாவிடம் இருந்தது. 2001ம் ஆண்டு தயாரிப்பு மாடலான இந்த எஸ்யூவியின் மதிப்பு ரூ.10,000 என்று தெரிவிக்கப்பட்டது.

08. டொயோட்டா பிராடோ

08. டொயோட்டா பிராடோ

2010ம் ஆண்டு முதல்வராக இருந்த சமயத்தில் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துவதற்காக இரண்டு டொயோட்டா பிராடோ எஸ்யூவிகளை ஜெயலலிதா வாங்கினார். தற்போது இதன் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.

 இப்போது...

இப்போது...

தற்போது 4 டொயோட்டா எல்சி200 எஸ்யூவி கார்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்தன. அதில், ஏற்கனவே இருந்த இரண்டு எல்சி200 எஸ்யூவி கார்கள் துரதிருஷ்டம் என கருதி, புதிதாக 2 எல்சி200 கார்களை வாங்கினார். அவை நேரடியாக ஜெயலலிதா பெயரில் பதிவு செய்யப்படவில்லை.

 அம்மா கார்களும் இப்போது சின்னம்மாவுக்கே?

இந்த டொயோட்டா எல்சி200 கார்கள் குண்டு துளைக்காத வசதி கொண்டவை. இந்த கார்களில் விபத்துக்களின்போது பயணிகளை காப்பதற்கான 10 ஏர்பேக்குகள் வரை கொடுக்கப்பட்டுள்ளன.

 அம்மா கார்களும் இப்போது சின்னம்மாவுக்கே?

டொயோட்டா எல்சி200 கார்களில் 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது. இதுதவிர, ஏராளமான வசதிகளுடன் ஜெயலலிதாவுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 அம்மா கார்களும் இப்போது சின்னம்மாவுக்கே?

இந்த டொயோட்டா எல்சி200 கார்களில் 262 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 4.5 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு சராசரியாக 5 கிமீ மைலேஜ் தருமாம். இந்த எஸ்யூவியில் 93 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 அம்மா கார்களும் இப்போது சின்னம்மாவுக்கே?

ஒவ்வொரு டொயோட்டா எல்சி200 எஸ்யூவியும் தலா ரூ.1.50 கோடி மதிப்பு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
All Amma Cars Goes to new hands.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X