சவுதி அரேபியாவில் முதன்முறையாக கார் ஓட்டப்போகும் பெண்கள்... தடை உத்தரவை நீக்கினார் மன்னர் சல்மான்..!

Written By:

சவுதி அரபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்து வந்த தடையை நீக்கி அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமாக கருதப்படும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கான சம உரிமை தரும் செயல்பாடுகள் கொஞ்ச காலமாகவே அதிகரித்து வருகிறது.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

பழமைவாத பாரம்பரியத்தை கைவிடக்கோரி பல்வேறு அமைப்புகள் சவுதி அரேபியாவில் போராட்டி வந்த நிலையில்,

கடந்த செவ்வாய் அன்று அந்நாட்டு அரசர் சல்மான் பெண்கள் கார் ஓட்டுவதற்காக இருந்து வந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

உலகிலேயே பெண்கள் கார் ஓட்ட தடையை விதித்து அதை தீவிரமாக பின்பற்றி வந்த ஒரே நாடாக இருந்தது சவுதி அரேபியா.

ஆனால் சமீப காலமாக பெண்களுக்கு சம உரிமை வழங்கிட பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் சவுதி அரேபியாவில் தீவிரமாக போராடி வருகின்றன.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

இதன் விளைவாகவே பெண்கள் கார் ஓட்ட சவுதி அரசு அனுமதியளித்துள்ளது. இது அந்நாட்டு பெண்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

மேலும் பெண்கள் முன்னேற்றத்தில் தொடர்ந்து சவுதி அரேபிய அரசு ஈடுபாடு காட்டும் என்று தெரிகிறது. இதனால் அவர்களுக்கான வேலை, பொதுவெளியில் சம உரிமை தருவதற்கான சூழலும் உருவாகும்.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

சவுதி அரேபியாவில் பல்வேறு கட்ட நவீன செயல்பாடுகள் இருந்தாலும். பெண்கள் கார் ஓட்டும் தடை அமலில் இருந்ததால், அது அந்த நாடிற்கு ஒரு பழமையான தோற்றத்தை அளித்தது.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக, சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு அந்நாட்டு பெண்கள் உட்பட உலகளவில் பலர் தங்களது பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

பெண்கள் கார் ஓட்டுவதற்கான ஆணை 30 நாட்களுக்குள் கட்டமைக்கப்பட்டு, 2018, ஜூன் 24 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

மன்னர் சல்மான் இதற்கான உத்தரவை பிறப்பித்த ஒரு மணி நேரத்தில் வாஷிங்டன் தூதுவரான இளவரசர் கலீல் பின் சல்மான், சவுதி அரேபிய வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் என்று கூறினார்.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

மேலும் அவர் தங்களது அரசு, மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருவதாகும், அதற்காக தேர்ந்த முடிவுகள் வரும் காலங்களிலும் தொடரும் என நம்புவதாக தூதுவர் கலீல் பின் சல்மான் தெரிவித்தார்.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

சவுதி நாட்டில் பல்வேறு முன்னேற்றங்களை மேற்கொள்ள, அமெரிக்க அரசுடன் அந்நாடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கு சவுதி விஷன் 2030 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை கடந்த 25 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பின்பற்றப்பட்டு வந்தது. இதை நீக்கக்கோரி பல்வேறு சமூக நல அமைப்புகள் போராடி வந்தன.

கார் ஓட்டும் தடையை தகர்க்க செய்த சவுதி அரேபிய பெண்கள்..!!

கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சமூக வலைதளங்களிலும் போராட்டங்கள், பிரச்சாரங்கள் கடந்த நாட்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Saudi Arabia will lift its ban on women drivers. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark