சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்ட ’மகளிர் மட்டும்’ கார் ஷோரூம்... விசேஷ தகவல்கள்..!!

Written By:
Recommended Video - Watch Now!
Indian Army Soldiers Injured In Helicopter Fall - DriveSpark

2018ம் ஆண்டு பிறந்ததில் இருந்தே சவூதி அரேபிய பெண்களுக்கு கொண்டாட்டம் தான். காரணம், இந்தாண்டு முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

கார் மட்டுமில்லாமல் பைக், டிரக் லாரி, பேருந்து உட்பட எல்லா வித வாகனங்களையும் பெண்கள் ஓட்ட அந்நாட்டின் போக்குவரத்து இயக்குநரகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

சவூதி அரேபிய நாடு தற்போது நவீன கலாச்சாரங்களையும், பெண்களுக்கான உரிமைகளையும் அனுமதித்து வருகிறது.

அரசராக சல்மான் இருந்தாலும், சவூதி அரசதிகாரம் தற்போது பட்டத்து இளவரசர் மொஹமத் பின் சல்மானின் கட்டுபாட்டில் உள்ளது.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

இதன் காரணமாக பல்வேறு நவீன கால கட்டமைப்புகளை இளவரசர் மொஹமத் அங்கு ஏற்படுத்தி வருகிறார். அதில் முதற்கட்டமாக சவூதி பெண்கள் தனியாக வாகனங்களை ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

இந்தாண்டு ஜூன் முதல் இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதை உறுதிப்படுத்தும் வகையில், பெண்களுக்கு என பிரத்யேகமாக இயங்கும் கார் ஷோரூம் ஒன்று சவூதியில் தொடங்கப்பட்டுள்ளது.

Trending On Drivespark Tamil:

கேரளாவின் சாலைகளில் புதிய ஸ்விஃப்ட் காரை சுற்றவைத்த மாருதி சுஸுகி.... காரணம் இதுதான்..!!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

ஒரு தனியார் கார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில், பெண்கள் மட்டுமே வாடிக்கையாளராக இருக்கு முடியும் என ஷோரூம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

ஷோரூமிற்கு வரும் பெண்கள் தாங்கள் விரும்பிய கார்களை அவர்களே தேர்வு செய்யலாம். மேலும் புதிய கார்களுக்கான ஆர்டர்கள் மற்றும் முன்பதிவுகளும் இங்கு பெறப்படும்.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

இங்கு பெண்கள் கார் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டால், அதற்காக வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கும், நிதி நிறுவனங்கள் மூலம் உதவி கிடைக்கவும் ஷோரூம் நிர்வாகம் ஏற்படுகள் செய்யும்.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

தவிர இந்த ஷோரூமில் பெண்களுக்கான கார் மாடல்கள் பற்றிய அலோசனைகள் வழங்கவும், விற்பனை சந்தையை விரிவு செய்யும் மேலான்மை பணிகளிலும் பெண்களே ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

என்ட்ரி லெவல் மாடல் தொடங்கி ஆடம்பர கார்கள் வரை மற்றும் ஹேட்ச்பேக் தொடங்கி ரேஸ் கார் வரை அனைத்து கார் மாடல்களும் இந்த மகளிர் மட்டும் ஷோரூமில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

Trending On Drivespark Tamil:

புதிய ஸ்விஃப்ட் மாடல் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரூ. 17000 வரை கார்கள் விலையை உயர்த்திய மாருதி..!

ரயிலின் கடைசிப்பெட்டிய கவனிச்சா பின்னாடி 'X'-ன்னு வரையப்பட்டுயிருக்கும்... அது ஏன் தெரியுமா..??

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

சவூதி அரேபியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் கார் ஷோரூம் இதுவாகும். மேலும் இங்கு காட்சிப்படுத்தப்பட்ட கார்கள் அனைத்தும் பெண்களுக்கே விற்கப்படும் என்பது ஷோரூம் நிர்வாகத்தினரின் கொள்கை.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

மேலும் ஷோரூம் நிர்வாகம், சவூதியில் பெண் வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொள்ள, பல்வேறு பகுதிகளில் ஆட்டோ மொபைல் விற்பனையகங்கள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

ஊபர் மற்றும் கரீம் டாக்சி போன்ற தனியார் வாடகை கார் நிறுவனங்கள் சவூதி பெண்களை தங்களது ஓட்டுநர்களாக வேலைக்கு நியமிக்க முடிவு செய்துள்ளது.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

சவூதியில் அதிக அளவிலான பெண்கள் வாடகை கார்களில் பயணம் செய்வதால் இது பெண்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

இவை மட்டுமின்றி, கடந்த 37 ஆண்டுகளாக வணிக ரீதியிலான சினிமா திரைப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சவூதியில் அவை மீண்டும் மறுமலர்ச்சி பெறுகின்றன.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

அந்நாட்டில் வர்த்தகம் மற்றும் வணிக நோக்கங்களை முன்வைத்து திரைப்படங்கள் திரையிட முயற்சிகள் நடந்து வருவதாக சவூதி அரேபியாவின் தகவல் மற்றும் கலாச்சார துறை தெரிவித்துள்ளது.

பெண்கள் மட்டும் வாடிக்கையாளர்களாக உள்ள சவூதி கார் ஷோரூம்

பழமைவாத சட்டதிட்டங்களில் இருந்து மாறி வரும் சவூதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மானின் '2030 விஷன்' திட்டத்தின் கீழ் பல அதிரடி மாற்றங்கள் அரசு நிர்வாகத்தில் நடந்து வருகின்றன.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Saudi Arabia's First Woman Only Car Show Room Gets Good Responses. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark