500 டன் லக்கேஜ்,1,500 பேருடன் ஆசியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த சவூதி மன்னர்!

Written By:

வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும் நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிபர்கள், பிரதமர்கள் போன்ற தலைவர்கள் கூடவே பெரும் பட்டாளத்தையும் அழைத்துச் செல்வது வழக்கமானதுதான். அவர்களது அதிகாரப்பூர்வ கார் மற்றும் அதிகாரிகள் குழு என செல்வதை வழக்கமாக பார்த்து வருகிறோம்.

500 டன் லக்கேஜ், ,1,500 பேருடன் ஆசியாவுக்கு டூர் அடித்த சவூதி மன்னர்!

ஆனால், எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு நாட்டு மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் வெளிநாட்டு பயணம் என்பது எப்போதுமே பரபரப்பு செய்தியாக மாறிவிடுகிறது. அதேபோன்று, சவூதி அரேபிய மன்னர் ஆசிய நாடுகளுக்கு டூர் அடித்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் மீடியாவின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.

500 டன் லக்கேஜ், ,1,500 பேருடன் ஆசியாவுக்கு டூர் அடித்த சவூதி மன்னர்!

ஆம், சவூதி மன்னர் சல்மான் ஆசிய நாடுகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவரது டூருக்கான ஏற்பாடுகள் மலைக்க வைத்துள்ளது. மலேசியா, இந்தோனேஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒரு மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் இந்தோனேஷியாவிற்கு வருகை தந்துள்ளார்.

500 டன் லக்கேஜ், ,1,500 பேருடன் ஆசியாவுக்கு டூர் அடித்த சவூதி மன்னர்!

அவருடன் 25 இளவரசர்கள், 10 அமைச்சர்கள், 800 அதிகாரிகள் மற்றும் 100 பாதுகாவலர்கள் உடன் வந்துள்ளனர். அவர்களுக்கான லக்கேஜை எடுத்து வரும் பொறுப்பை சவூதியை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது. இதற்காக 572 தொழிலாளர்களை அந்த நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. அப்படி எவ்வளவு லக்கேஜ் என்கிறீர்களா?

500 டன் லக்கேஜ், ,1,500 பேருடன் ஆசியாவுக்கு டூர் அடித்த சவூதி மன்னர்!

சவூதி மன்னர் மற்றும் உடன் வந்தவர்களுக்காக 506 டன் லக்கேஜ் இந்தோனேஷியா வந்து இறங்கி உள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. 1,500 பேருடன் இந்தோனேஷியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார் சவூதி மன்னர்.

500 டன் லக்கேஜ், ,1,500 பேருடன் ஆசியாவுக்கு டூர் அடித்த சவூதி மன்னர்!

சவூதி மன்னர் சல்மானுக்காக இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 லிமோசின் கார்களும் உடன் எடுத்து வரப்பட்டுள்ளன. இரண்டு மின்தூக்கிகளும் சவூதியிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளதாம். இதற்காக, 27 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம்.

500 டன் லக்கேஜ், ,1,500 பேருடன் ஆசியாவுக்கு டூர் அடித்த சவூதி மன்னர்!

81 வயதாகும் சவூதி மன்னர் சல்மானின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் எப்போதுமே மீடியாவினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த சவூதி மன்னர் சல்மான் ஜார்ஜ்டவுன் நகரில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஓட்டலை முழுவதுகமாக புக்கிங் செய்து வியக்க வைத்தார்.

500 டன் லக்கேஜ், ,1,500 பேருடன் ஆசியாவுக்கு டூர் அடித்த சவூதி மன்னர்!

அடுத்தாக, பிரான்ஸ் நாட்டிற்கு ஓய்வெடுக்க சென்ற அவர் ரிவெய்ரா பீச்சில் பொழுதுபோக்க சென்றபோது அந்த பீச் முழுவதையும் வெளியாட்கள் வராதவாறு மூடப்பட்டது. இது அந்த பகுதி உள்ளூர் வாசிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் எதிர்ப்ப்பையும் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: Saudi king is bringing a massive 506 tons of luggage to Indonesia for a visit

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark