தங்கத்தால் ஆன எஸ்கலேட்டரால், ரஷ்யாவில் அவதிப்பட்ட சவூதி மன்னர் சல்மான்..!!

Written By:

அரேபிய நாட்டில் இருக்கும் பெரும் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கை உலகறிந்தது. அதுவும் அந்நாட்டின் ராஜவம்சத்தினரின் வாழ்க்கை ஆடம்பரத்தையும் மிஞ்சும் வல்லமை கொண்டது.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

சவுதியின் அரசரான சல்மான் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிற்கு தனிநபர் விமானம் மூலம் வந்திருந்தார்.

தரையிறங்கிய விமானத்தில் இருந்து மன்னர் சல்மான் கீழிறங்க அவருக்காக எஸ்கலேட்டர் வசதி கொண்ட படிக்கட்டு இறக்கப்பட்டது.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

மன்னரை வரவேற்க காத்திருந்த ரஷ்யாவின் அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கும், இறக்கப்பட்ட எஸ்கலேட்டரை பார்த்தவுடன் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

காரணம், அது முழுக்க முழுக்க தங்கத்தால் அமைக்கப்பட்டு இருந்தது. கைப்பிடிகள் மற்றும் இதர கட்டமைப்புகள் எல்லாம் இரும்பில் இருக்க, படிக்கட்டு மட்டும் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு இருந்தது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

தங்கத்தால் ஆன அந்த எஸ்கலேட்டரில் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாஸிஸ் இறங்கி வந்தே கொண்டே இருந்தார்.

அவர் 81 வயதானவர் என்பதால் ஒருவரது உதவியின் மூலம் தான்ச் அவரால் இறங்கி தான் வர முடிந்தது.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

மேலும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் இந்த எஸ்கலேட்டரும் தயாரிக்கப்பட்டு இருந்தது.

கீழே இறங்கும் அதே நேரத்தில் அதிகாரிகளை பார்த்து மன்னர் சல்மான் கை அசைத்து வரவேற்பை ஏற்க இறங்கி வந்து கொண்டு இருந்தார்.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

ஆனால் எதிர்பாராத விதமாக எஸ்கலேட்டர் பாதியிலேயே நின்றுவிட்டது. திடுக்கிட்டு நின்ற எஸ்கலேட்டரால் மன்னர் சல்மான் திடுக் என்று ஆனார்.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

மன்னரின் நகரும் படிக்கட்டு நின்றதை பார்த்த சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்ன தான் கோளாறு பார்த்தாலும் நகரும் படிக்கட்டு நகரவே மாட்டேன் என்றது.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

அதிகாரிகள் எஸ்கலேட்டரை சரிசெய்ய பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்க, பார்த்த மன்னர் சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு மன்னர் தங்க நகரும் படிக்கட்டை தாண்டி தரையில் கால்வைத்தார்.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

மன்னர் சல்மானின் தங்க நகரும் படிக்கட்டுக்கு ஏற்பட்ட இந்த நிலையை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவிட, அது இன்னும் வைரலானது.

அரசு முறை பயணமாக ரஷ்யாவிற்கு வந்துள்ள மன்னர் சல்மான் நான்கு நாட்கள் அங்கே தங்கவுள்ளார்.

சவூதி மன்னரை பாதிவழியில் தவிக்கவிட்ட தங்க படிக்கட்டு..!!

அவர் நான்கு நாட்கள் தங்கி மாஸ்கோவை சிறிப்பிக்கும் வரை மன்னர் சாப்பிட 800 கிலோ உணவு பொருட்கள் சவூதி அரேபியாவில் இருந்தே எடுத்துவரப்பட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Saudi king's gold escalator handed over to half-viral in social networks. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark