'கலியுக கர்ணன்' சவூதி இளவரசர் அல் வாலீத்தின் மோட்டார் உலகம்!

By Saravana Rajan

கலியுக கொடை வள்ளல் என்ற பெருமைக்குரியவராக கருதப்படும், சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலால் தனது 2 லட்சம் மதிப்புடைய சொத்துக்களை அறக்கட்டளை மூலமாக, சமூக நலப் பணிகளுக்கு செலவிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

பில்கேட்ஸ், வாரன் பஃபெட் போன்ற உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களது சொத்தில் குறிப்பிட்ட பகுதியை பொது காரியங்களுக்கு கொடையாக கொடுத்து வந்தாலும், அல் வாலீத் தனது மொத்த சொத்துக்களையும தான, தர்மமாக வழங்க உள்ளதாக தெரிவித்திருப்பது அவரை கலியுக கர்ணனாகவே பாவிக்க செய்துள்ளது.

அவரது வள்ளல் மனமும், சொத்து மதிப்பும் மட்டுமின்றி, அவரின் கார் கலெக்ஷன், சொந்த பயன்பாட்டு விமானம், ஆடம்பர படகு என அனைத்துமே உலகின் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கராஜில் 300க்கும் அதிகமான கார்கள் உள்ளன. அவரது மோட்டார் உலகம் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு.

01. ரொம்ப பெரிசு...

01. ரொம்ப பெரிசு...

அல் வாலீத்தின் மோட்டார் உலகம் முழுவதுமாக கொடுக்க முடியாவிட்டாலும், அவரின் பெருமைகளையும், ரசனையையும் பரைசாற்றும் ஒரு சில கார் மாடல்களை இங்கே வழங்கியுள்ளோம். இதுபோல, அவரிடம் இருக்கும் தனிநபர் பயன்பாட்டு விமானம், ஆடம்பர படகு, வைர டுகாட்டி பைக் போன்ற சுவாரஸ்யமான மோட்டார் வாகனங்களை பற்றி தகவல்களை தொடர்ந்து காணலாம்.

02. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

02. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ஓக் மர வேலைப்பாடுகளுடன் பிரத்யேகமாக கஸ்டைமஸ் செய்யப்பட்ட இன்டிரியர், எல்சிடி திரைகளுடன் கூடிய பொழுதுபோக்கு சாதனங்கள் என பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. அவரின் ரசனைக்கேற்ப கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது.

 03. வைர டுகாட்டி

03. வைர டுகாட்டி

வைர கற்கள் பதிக்கப்பட்ட டுகாட்டி பைக் ஒன்றும் அவரிடம் உள்ளது. இதனை 4.8 மில்லியன் டாலர் விலை கொடுத்து அவர் கஸ்டமைஸ் செய்து வாங்கினார்.

04. வைர கார் இருக்கிறதா?

04. வைர கார் இருக்கிறதா?

3 லட்சம் மதிப்புமிக்க வைர கற்கள் பதிக்கப்பட்ட பென்ஸ் கார் ஒன்று சவூதி இளவரசரிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம். இந்த காரை பற்றி கூடுதல் தகவல்களுக்கு க்ளிக் செய்க.

 05. ஸ்போர்ட்ஸ் கார்கள்

05. ஸ்போர்ட்ஸ் கார்கள்

உலகின் மதிப்புமிக்க ஸ்போர்ட்ஸ் கார்கள் அவரது கராஜில் இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஃபெராரி, லம்போர்கினி பிராண்டுகளின் பல கார்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதில் காட்டும் ஆர்வம் போன்றே, பராமரிப்பதிலும் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு.

06. அன்பளிப்பு கார்கள்

06. அன்பளிப்பு கார்கள்

கார்களை பரிசளிப்பதிலும் அலாதி பிரியம் கொண்டவர். உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு நடந்த சவூதி கால்பந்தாட்ட போட்டியில், சாம்பியன் பட்டம் பெற்ற நஸர் கால்பந்து க்ளப்பை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட 25 பேருக்கு பென்ட்லீ கார்களை பரிசளித்துள்ளார்.

07. ஆடம்பர படகு

07. ஆடம்பர படகு

அல் வாலீத்திற்கு ராசியான எண் 5. அதன்பேரிலேயே 5KR என்ற பெயரில் ஒரு ஆடம்பர படகை வைத்திருக்கிறார். 1980ல் கட்டப்பட்ட அந்த 282 அடி நீளமுடைய படகில், சினிமா தியேட்டர், ஹெலிகாப்டர் தளம், ஆடம்பர வசதிகள் கொண்ட படுக்கை அறைகள் என ஒரு மிதக்கும் நட்சத்திர ஓட்டலாக இருக்கிறது.அந்த காலத்தில் உலகின் மிகப்பெரிய படகு என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்தநிலையில், இந்த படகிற்கு பதிலாக புதிய படகு ஒன்றை 500 மில்லியன் டாலரில் வாங்க இருக்கிறார். New Kingdom 5KR என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகு அடுத்த ஆண்டு டெலிவிரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 08. போயிங் விமானம்

08. போயிங் விமானம்

சவூதி இளவரசர் அல் வாலீத்தின் சொந்த பயன்பாட்டிற்காக, போயிங் 747 ஜம்போ விமானம் ஒன்று உள்ளது. பெரும் பணக்காரர்களுக்காக விசேஷ வசதிகள் கொண்ட போயிங் 747 விமானத்தின் தனி நபர் பயன்பாட்டு மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டது. அதில், ஒன்றை அல் வாலீத் வாங்கி பயன்படுத்தி வருகிறார். வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப உட்புற அமைப்புடன் இந்த விமானம் கட்டப்பட்டது.

09. ஏர்பஸ் ஏ380

09. ஏர்பஸ் ஏ380

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 ஒன்றை அவர் ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அந்த விமானத்தை அவர் விற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல் வாலீத் ஆர்டர் செய்த ஏர்பஸ் ஏ380 பற்றிய தகவல்களுக்கு க்ளிக் செய்க.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Saudi Prince Al Waleed Bin Talal Motor World.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X