2018 ஜூன் மாதத்திற்காக ஆர்வமுடன் காத்திருக்கும் சவூதி அரேபிய பெண்கள்.... காரணம் இதுதான்..!!

2018 ஜூன் மாதத்திற்காக ஆர்வமுடன் காத்திருக்கும் சவூதி அரேபிய பெண்கள்.... காரணம் இதுதான்..!!

By Azhagar

பிறக்கவிருக்கும் புத்தாண்டு யாருக்கு நன்மையை தருகிறதோ இல்லையோ. சவூதி அரேபிய பெண்களுக்கு 2018ம் ஆண்டு புதிய உற்சாகத்தை பாய்ச்சவுள்ளது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு..!

முதன்முதலாக சாலைகளில் மோட்டார் சைக்கிள், டிரக், கார் உள்ளிட்ட வாகனங்களை தாங்களே ஓட்டி செல்லும் நாளிற்காக அந்நாட்டு பெண்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு..!

உலகளவில் பல நாடுகளில் பாலின பாகுபாடுகளை அகற்ற ஏற்கனவே பல முயற்சிகள் தொடங்கப்பட்டு, அது வளர்சிக்கான கட்டத்தை அடைந்துவிட்டது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

ஆனால் சவூதி அரேபியாவில் நிலைமை அப்படியில்லை. பொதுவெளியில் ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கான உரிமைகள் இன்னும் மறுக்கப்பட்டு தான் வருகின்றன.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

இதை களையும் நோக்கில் அந்நாட்டின் பட்டத்து இளவரசரான மொஹமத் பின் சல்மான், பல புதிய நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறார்.

Recommended Video

Maruti Suzuki Electric Car India Launch Details - DriveSpark
பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

அதன்படி சவூதி அரேபிய அரசர் சல்மான், 2018 ஜூன் முதல் பெண்கள் வாகனங்களை இயக்கலாம் என்பதற்கான உத்தரவை பிறப்பத்தி அந்த நாட்டினரையே ஆச்சர்யப்பட வைத்தார்.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

இதை ஏற்றுக்கொண்டுள்ள அந்நாட்டின் போக்குவரத்து இயக்குநரகம் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு என புதிய சட்டங்கள் வகுக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

மேலும் பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு பிரத்யேக உரிமங்கள் எதுவும் தேவையில்லை என போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்திருப்பதுசவூதி அரேபிய பெண்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

சவூதி அரேபியாவில் 2018 ஜூன் முதல் போக்குவரத்து விதிகள் ஆண், பெண் என இருபாலருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். பெண்கள் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டால், அவர்களுக்கு பெண்களே சிகிச்சை அளிப்பார்கள்.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

அதற்கான பணியிடங்களுக்கு பெண்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். இது தவிர சாலையில் உள்ள வாகன சோதனை சாவடிகளிலும் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

2018 ஜூன் முதல் சாலைகளில் கார் ஓட்டி செல்ல பல பெண்கள் தற்போதே ஆர்வமாக தயாராகி வருகின்றனர். பெண்கள் வாகனங்களை இயக்கி பழக, அவர்களது குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளார்கள்.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

சவூதி அரேபியாவில் இருக்கும் பெண்களில் தங்கைகளுக்கு அண்ணன்களும், மனைவிகளுக்கு அவர்களது கணவர்மார்களும் , மகள்களுக்கு அப்பாக்களும் வாகனங்களை ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர்.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

பெண்கள் வாகனங்களை ஓட்டி பழக, பெண்கால் நடத்தப்படும் டிரைவிங் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிவதாகவும் பல செய்திகள் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

சமூகம் சார்ந்த வளர்ச்சி பணிகளில் சவூதி அரேபியா முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கைகள் அடிப்படையானது தான். பல நாடுகள் பெண்கள் முன்னேற்றத்தில் உச்சம் தொட்டு வருகின்றன.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

பெண்கள் பாதுகாப்பிற்காக பல முன்மாதிரிகளை அறிந்து, சவூதி அரேபிய அரசு பல வளர்ச்சிமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் சவூதி அரேபிய அரசு புதிய உத்தரவு

அதற்கு சவூதி அரேபியாவின் தற்போதைய முடி இளவரசர், மொஹமத் பின் சல்மான் உறுதுணையாக இருப்பார் என நாமும் எதிர்பார்ப்போமாக

More from DriveSpark

Article Published On: Tuesday, December 26, 2017, 13:54 [IST]
English summary
Read in Tamil: Saudi Arabila Women Cam Ride Truck, Motorcycles also not Only Cars. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+