ரம்பை, ஊர்வசிலாம் ஓரமாதான் நிக்கணும்! காஸ்ட்லியான சொகுசு காரை வாங்கனது அவங்களா! அவங்கள மாதிரியே காரும் அழகு!
பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு சௌமியா டான்டனும் (Saumya Tandon) விதிவிலக்கு அல்ல. இவர் பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு நடிகை ஆவார். இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) ஆகும். வழக்கமாக திரையுலக நட்சத்திரங்கள் பெரும்பாலானோர், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு எஸ்யூவி ரக கார்களைதான் வாங்குவார்கள்.
ஆனால் சௌமியா டான்டன் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். E 200, E 220d மற்றும் E 350d என மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 76.05 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 89.15 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இந்த காரின் எந்த வேரியண்ட்டை சௌமியா டான்டன் வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.
செயல்திறனை பொறுத்தவரையில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) இந்த காரில் கொடுக்கப்படுகின்றன. இந்த 3 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 12.3 இன்ச் அளவில் 2 திரைகள் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளன. இதில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதுதவிர, பனரோமிக் சன்ரூஃப், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், முன் மற்றும் பின் பகுதியில் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற பல்வேறு வசதிகளும், மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரில் வழங்கப்படுகின்றன. அதே சமயம் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சமில்லை.
பாதுகாப்பை பொறுத்தவரையில், 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்றவை, மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரின் மிகவும் முக்கியமான வசதிகளாக உள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series), ஆடி ஏ6 (Audi A6) மற்றும் வால்வோ எஸ்90 (Volvo S90) போன்ற கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் சொகுசு செடான் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








