அசிங்கப்படுத்துறதுல இந்தியர்கள் டிகிரி முடிச்சவங்களா இருப்பாங்க போல.. பெரிய இடம்னுகூட பாக்காம செஞ்சுட்டாங்க!
இந்தியாவைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்களில் சவுரப் அஹுஜா-வும் ஒருவர் ஆவார். இவர் மிகப் பெரிய கார் காதலரும்கூட. இதனால்தான் இந்தியாவின் மிகவும் பிரபலமான கராஜ்களில் ஒன்றாக இவருடையதும் இருக்கின்றது. மேலும், கார்கள் மீது கொண்டிருக்கும் அதீத காதலை வெளிக்காட்டும் விதமாக அவர் சமீபத்தில் மெக்லாரன் ஆர்சுரா (McLaren Artura) காரை வாங்கினார். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரை ஏன் அவர் வாங்கினார் என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. அதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
சவுரப் அஹூஜா, மெக்லாரன் ஆர்சுரா சூப்பர் காரை வாங்குவதற்கு முன்னர் ஃபெர்ராரி 296 ஜிடிபி (Ferrai 296 GTB) சூப்பர் கார் மாடலை வாங்கும் எண்ணத்திலேயே அவர் இருந்திருக்கின்றார். ஆனால், திடீரென இந்த பிளானை மாற்றியிருக்கின்றார். இது ஏன் என்கிற உண்மையையே அவர் தற்போது வெளியுலகிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்.

குறிப்பு: படம் காரை டெலிவரி பெற்றபோது எடுக்கப்பட்டது. ஃபெர்ராரி 296 ஜிடிபி காரை வாங்குவதற்காக விற்பனையாளரை நாடியபோது சில சிக்கல்களை ஷோரூம் பணியாளர்கள் வாயிலாக அவர் சந்திக்க நேரிட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் விதமாக ஃபெர்ராரி 296 ஜிடிபி காரை லிஸ்ட்டில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மெக்லாரன் ஆர்சுரா சேர்த்திருக்கின்றார்.
மிகவும் மந்தமாகவும், மரியாதைக் குறைவாகவும் சவுரப்பை ஷோரூம் ஊழியர்கள் நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே கடைசி நேரத்தில் பிளானை அவர் மாற்றி இருக்கின்றார். அதேவேளையில், மெக்லாரன் ஆர்சுரா அவ்வளவு சாதாரணமான கார் மாடல் அல்ல. இது மிகவும் அதிக ஆற்றலை உருவாக்கக் கூடிய அதேவேளையில், அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது.
அந்தவகையில், இந்த காரின் சிறந்த செயல் திறனுக்காக 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பிளக் இன் ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கும். ஆகையால், இந்த காரை பெட்ரோல் வாகனமாகவும், தேவைப்பட்டால் மின்சார வாகனமாகவும் சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இத்தகைய காரையே இந்திய தொழிலதிபர் தற்போது வாங்கி இருக்கின்றார். இதன் ஐசிஇ எஞ்சின் மட்டும் தனியாக 577 பிஎச்பி பவரையும், 584 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதேபோல், இதன் மின்சார மோட்டார் 94 பிஎச்பி மற்றும் 225 என்எம் டார்க் வரையிலான ஆற்றலை உருவாக்கும்.
இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ ஆகும். இதனால் வெறும் 3 செகண்டுகளிலேயே மணிக்கு நூறு கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. கத்தரிக்கோலை போன்ற திறக்கும் கதவுகள், ஆறு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட சொகுசு இருக்கை, அட்டகாசமான மியூசிக் சிஸ்டம் என ஏகப்பட்ட சிறப்புகளை தாங்கிய ஆர்சுரா காரையே தற்போது சவுரப் பயன்படுத்தி வருகின்றார்.
மெக்லாரன் ஆர்சுரா இந்தியாவில் ரூ. 6 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சவுரப் இந்த காரை மட்டுமல்ல இன்னும் பல விலை உயர்ந்த கார் மாடல்களை பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில், அவரிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 ஏஎம்ஜி (Mercedes-Benz GLC 43 AMG) மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport) உள்ளிட்ட கார் மாடல்களையும் பயன்படுத்தி வருகின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் டீடெய்லிங் செய்யும் தொழிலையே சவுரப் மேற்கொண்டு வருகின்றார். அதாவது, ஏற்கவனே அழகாக இருக்கும் கார்களை இன்னும் அழகானதாக மாற்றும் தொழிலையே அவர் பார்த்து வருகின்றார். இந்த தொழிலைத் தொடர்ந்தே அவர் மிக பெரிய விலை உயர்ந்த கார்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்.


Click it and Unblock the Notifications








