வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

பிரபல நடிகர் ஒருவர் ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சவுரப் சுக்லா (Saurabh Shukla). பல வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் சவுரப் சுக்லா நடித்துள்ளார். இவர் தற்போது தனக்காக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது ஆடி க்யூ2 (Audi Q2) கார் ஆகும். ஆடி க்யூ காரானது, சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

சவுரப் சுக்லா ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி காரை டெலிவரி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆடி டீலர்ஷிப் சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளது. இதன் மூலம் வெள்ளை நிற ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி காரை, சவுரப் சுக்லா வாங்கியுள்ளார் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. க்யூ2 சொகுசு எஸ்யூவி காரை டெலிவரி எடுத்தபோது சவுரப் சுக்லா 'கேக்' வெட்டி கொண்டாடியுள்ளார்.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி காரின் எந்த வேரியண்ட்டை சவுரப் சுக்லா வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கு முன்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் சவுரப் சுக்லா பார்க்க முடிந்துள்ளது. இதுவும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்தான். இதன் மூலம் சவுரப் சுக்லா எஸ்யூவி கார்களின் காதலர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

தற்போதைய நிலையில் ஆடி நிறுவனத்தின் இந்திய லைன்-அப்பில் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக க்யூ2 சொகுசு எஸ்யூவி உள்ளது. அத்துடன் ஆடி நிறுவனத்தின் சிறிய எஸ்யூவி கார்களில் ஒன்றாகவும் இதனை குறிப்பிடலாம். தற்போதைய நிலையில் ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 34.99 லட்ச ரூபாயாக உள்ளது.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 48.89 லட்ச ரூபாயாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும், க்யூ2 காரில் நிறைய வேரியண்ட்டை ஆடி நிறுவனம் வழங்குகிறது. ஸ்டாண்டர்டு, பிரீமியம், பிரீமியம் I, பிரீமியம் II மற்றும் டெக்னாலஜி என ஆடி க்யூ2 காரில் நிறைய வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த காரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் கூட பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. ஆனால் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே இந்த கார் கிடைக்கிறது. இது டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன் மூலம் இன்ஜின் சக்தியானது, காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த எண்கள் உங்களுக்கு ஏற்கனவே பரிட்சயமானதாக இருக்கலாம். ஏனெனில் இதே இன்ஜின்தான் ஸ்கோடா ஆக்டேவியா, ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா கோடியாக் உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி காரில் இந்த இன்ஜின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி கார் வெறும் 6.5 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 228 கிலோ மீட்டர்களாக உள்ளது. ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி காரில் மொத்தம் 5 டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

கம்ஃபோர்ட், டைனமிக், ஆட்டோ, இன்டிவியூஜூவல் மற்றும் எஃபிசியன்சி என மொத்தம் 5 டிரைவிங் மோடுகளை இந்த கார் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, வால்வோ எக்ஸ்சி40 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 உள்ளிட்ட கார்களுடன் ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி கார் விற்பனையில் போட்டியிட்டு கொண்டுள்ளது.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் போட்டியாளர்களை காட்டிலும் ஓரளவிற்கு குறைவான விலையில் ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி கார் கிடைக்கிறது. இருப்பினும் இந்த காரில் ஆடி நிறுவனம் ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளது. ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி காரில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேற லெவல்ல இருக்கு... ஆடி நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை எவ்ளோனு தெரியுமா?

மேலும் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ஆம்பியண்ட் லைட்டிங், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றையும் ஆடி க்யூ2 சொகுசு எஸ்யூவி கார் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Saurabh shukla buys audi q2 here are all the details
Story first published: Monday, January 3, 2022, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X