டிராஃபிக்கிற்கு பைபை சொல்லுங்க: போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது தானியங்கி பறக்கும் கார்?

டட்ச் நாட்டைச் சேர்ந்த பால்-வி நிறுவனம் பறக்கும் வகையிலான லிபர்ட்டி என்னும் கார தயாரித்துள்ளது. இந்த கார் இன்னும் ஐந்து வருடங்களில் வானில் பறப்பதைக் காணலாம் என இந்த கார் தயாரிப்பில் இண்டல் நிறுவனம் சார்பாக ஈடுபட்டு வரும் அதன் தலைவர் அணில் நந்தூரி கூறியுள்ளார்.

டிராஃபிக்கிற்கு பைபை சொல்லுங்க: போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது தானியங்கி பறக்கும் கார்...?

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் 89-வது சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற்றது. இந்த சர்வதேச வாகன கண்காட்சியில் உலகின் பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புத்தம் புதிய தயாரிப்பு கார்களை அறிமுகம் செய்தனர். அதன்படி, ஜாகுவார், லம்போர்கினி, புகாட்டி, ஃபெராரி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்கள் தங்களின் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர்.

மேலும், இந்த கண்காட்சியில் டட்ச் நாட்டைச் சேர்ந்த பால்-வி நிறுவனம், லிபர்ட்டி எனப்படும் உலகின் முதல் தானியங்கி பறக்கும் காரை அறிமுகம் செய்தது. முழுக்க முழுக்க பேட்டரியால் இயங்கும் இந்த கார் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிராஃபிக்கிற்கு பைபை சொல்லுங்க: போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது தானியங்கி பறக்கும் கார்...?

இந்த லிபர்ட்டி பறக்கும் கார் சாலையில் மூன்று சக்கரங்களைக் கொண்டு இயங்கும். மேலும், இந்த காரில் பறப்பதற்காக ஒரு எஞ்ஜினும், சாலையில் செல்வதற்காக எஞ்ஜினும், என இரண்டு எஞ்ஜின்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, காரைப் பறக்க வைக்க ஏதுவாக காரின் மேற்புறத்தில் பெரிய அளவிலான இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அது, கார் பறக்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில், அதாவது சாலையில் பயணிக்கும் நேரத்தில் மடித்து வைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிராஃபிக்கிற்கு பைபை சொல்லுங்க: போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது தானியங்கி பறக்கும் கார்...?

இந்த கார் பறக்கும் மோடிற்கு மாறுவதற்கு குறைந்தது 5ல் இருந்து 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். மேலும், இது டேக்-ஆஃப் செய்ய 90-200x200 மீட்டர் இடைவெளித் தேவைப்படும். ஆகையால், இந்த காரை நினைத்த இடத்தில் தரையிறக்கி, டேக்-ஆஃப் செய்து கொள்ள முடியாது. இதேபோன்று, காரை இயக்குவதற்கு முறையான பயிற்சி மற்றும் உரிமமும் பெறுவது கட்டாயம். இந்த கார் மினி ஹெலிகாப்டரைப் போன்று வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், வானில் பறக்கும்போது வாகனத்தை எவ்வாறு கண்ட்ரோல் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே வாகனத்தை எளிதில் இயக்க முடியும்.

லிபர்டியின் கார் மோட் எஞ்ஜின் 99பிஎச்பி பவரைக் கொண்டதாகும். இது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. மேலும், இதன் பிக்அப் திறனானது, 0-62 கிமீ வேகத்தை வெறும் 30 செகண்டில் தொட்டுவிடும்.

டிராஃபிக்கிற்கு பைபை சொல்லுங்க: போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது தானியங்கி பறக்கும் கார்...?

இதேபோன்று, லிபர்டியின் பறக்கும் மோடிற்காக 197 பிஎச்பி பவரைக் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 3 ஆயிரத்து 500 மீட்டர் உயரம் வரை பறக்க வைக்கும். மேலும், இந்த கார் மணிக்கு 180 கிமீ வேகத்தில் பறக்கும் திறனுடையது.

இந்த நிலையில், எதிர்கால பறக்கும் கார்கள் குறித்து இண்டல் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அணில் நந்தூரி கூறியதாவது, "இன்னும் ஐந்து வருடங்களில் பறக்கும் காரின் பயன்பாடு உலகின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துவிடும். சமீபகலாகமாக டிரான்கள் பல்வேறு விதமாக நமக்கு பயனளித்து வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவ்வாறு கண்கானிப்பு, டெலிவரி, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளில் டிரான் கேமராக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

டிராஃபிக்கிற்கு பைபை சொல்லுங்க: போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது தானியங்கி பறக்கும் கார்...?

இது சாலையில் ஏற்படும் மூன்றுவிதமான பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும். அதன்படி டிராஃபிக், நேரம் வீணடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படும். மேலும், இந்த டிரான் காரில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கம்போர்ட் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, பறக்கும் காரின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால், கூடிய விரைவிலேயே இது மாற்றமடைந்து வானில் டிரான் கார்கள் பறப்பதை நாம் அனைவரும் காண்போம் என நம்பிக்கைத் தெரவித்தார். இதேபோன்று, பறக்கும் கார்கள், கால் டாக்ஸியிலும் பயன்படுத்தப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை எனவும் அவர் கூறினார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Say Bye Bye To Traffic-Flying Cars Will Come With In 5 Years: Says Intel chief Anil Nanduri. Read In Tamil.
Story first published: Tuesday, March 12, 2019, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X