டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்...? பொதுமக்கள் மகிழ்ச்சி...!

அனைத்து விதமான பார்க்கிங்கிற்கும் கட்டணம் வசூலிக்கும் டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி...!

தேசத்தின் தலைநகரமான டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் அம்மாநில போக்குவரத்துத்துறை பல்வேறு சிக்கலை சந்தித்து வருகின்றது. இதில், முக்கியமானதாக காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் முதல் இடத்தில் இருக்கின்றன.

டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி...!

இதைத்தொடர்ந்து, டெல்லி அரசு காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்களைக் கட்டுபடுத்தும் விதமாக, பத்து ஆண்டுகள் பழைய வண்டியை, அதிகமாக காற்றில் மாசினை கலக்கும் வாகனங்களை மாநிலத்தில் பயன்படுத்தக் கூடாது என தடைவிதித்திருந்தது. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக புதிய பார்க்கிங் கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்தது.

டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி...!

இந்த புதிய பார்க்கிங் கட்டணம் திட்டத்தை டெல்லி வாகன நிறுத்த பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகள் 2017 மூலம் கொண்டுவந்தது. இந்த திட்டமானது, வாகனங்களை டெல்லியின் சாலைப் பகுதியிலோ அல்லது குடியிருப்பகுதியிலோ பார்க்கிங் செய்தால் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதியாகும். இந்த திட்டத்தின்மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததன் காரணமாக டெல்லி அரசு தற்போது சிக்கலில் சிக்கியுள்ளது.

டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி...!

குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் காலி மனைகளையும் இனி பார்க்கிங் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதன் உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு குடிமை முகவர்களும், குடியுரிமை நலச்சங்கமும் பரஸ்பரம் பேசி எவ்வளவு கட்டணம் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி...!

இத்திட்டத்தை எதிர்த்து முன்னதாக மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி...!

அப்போது, பார்க்கிங் திட்டத்திற்கு எதிராக வாதிட்ட வழக்குரைஞர் அபரஜிதா சிங், "டெல்லி அரசின் இந்த திட்டமானது, மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது. கார் உரிமையாளர்களுக்கு இலவச பார்க்கிங் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என வாதிட்டார்.

டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி...!

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் குறுக்கிட்டு, வாகனங்களை சாலையில் அல்லது நடைபாதையில் பார்க்கிங் செய்வதற்கு அரசால் எவ்வாறு கட்டணம் விதிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்கள். தொடர்ந்து, இந்த திட்டமானது முட்டாள்தானமானது என்று காட்டமாக தெரிவித்தனர். இத்திட்டத்தின்மூலம், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற கருத்தையும் தெரிவித்தார்கள்.

டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த உச்சநீதிமன்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி...!

இந்த திட்டம்குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் என உத்தரவிட்டனர். முன்னதாக, நகரத்தின் முக்கிய பகுதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய ஏதுவாக இடங்களை உறுவாக்கவும் டெல்லி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
SC Denies Charging Fee For Parking Vehicles Outside Of Residents. Read In Tamil.
Story first published: Thursday, March 7, 2019, 17:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X