ஒரு ஆளுக்கு ஒரு கார் தான் வாங்கனும் மீறி வாங்குனா அதிகமா வரிகட்டனும்! கோர்ட்டில் தொடரப்பட்ட நூதன வழக்கு

இந்தியாவில் இனி ஒரு நபர் ஒரு காருக்கு மேல் வாங்கினால் அவருக்கு சுற்றுச்சூழல் வரி விதிக்கப்பட வேண்டும் என கோர்ட்டில் என்ஜிஓ அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வழக்கு சொல்வது என்ன? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்திய மக்களுக்கு இன்று கார், பைக் ஒரு முக்கியமான தேவையாகிவிட்டது. மக்கள் பலர் இன்று ஏதாவது ஒரு வாகனத்தைத் தினந்தோறும் தனது அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திய மக்கள் சமீபகாலமாக அதிகமாக கார்களை வாங்கி வருகின்றனர். இதனால் கார்களின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கார்கள் எந்த அளவிற்கு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ அதே அளவிற்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது.

ஒரு ஆளுக்கு ஒரு கார் தான் வாங்கனும் மீறி வாங்குனா அதிகமா வரிகட்டனும்! கோர்ட்டில் தொடரப்பட்ட நூதன வழக்கு

பெட்ரோல்/டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் எரிந்து மாசுவாக வாகனங்களிலிருந்து வெளியேறுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கிறது. இந்தியாவில் மொத்தம் வெளியேறும் மாசுகளில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான மாசு வானகங்களிலிருந்து தான் புகைகளாக வெளியேறுகிறது. அதனால் இப்படியான மாசுவை குறைக்க அரசு எலெக்ட்ரிக் வாகனங்கள், ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் வாகனங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒரு நபர் ஒரு வாகனத்தை வாங்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவரே இரண்டாவது வாகனத்தையும் அவரது பெயரில் வாங்கினால் அந்த வாகனத்திற்கு சுற்றுச்சூழல் செஸ் வரியை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களால் ஏற்படும் மாசு கட்டுப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசுத் மற்றும் நீதிபதி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்சிற்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு இந்தியச் சட்டம் ஆர்டிகிள் 32 சம்மந்தமானது, இந்த மனு அரசின் கொள்கை தொடர்பான விஷயம். இதில் கோர்ட் தலையிட முடியாது. எனக் கூறி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை என்ஜிஓ அமைப்பான சுனாமி ஆன் ரோட்ஸ் என்ற அமைப்பு சார்பில் தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தாலும் கோர்ட் இந்த வழக்கில் மத்திய அரசிடம் காற்று மாசுவை கட்டுப்படுத்த தேசிய அளவிலான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதற்கான சிறப்பான நடந்த கவனிப்புகள் என்ன, எதெல்லாம் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட பரிந்துரை/ அறிவுரை/ உத்தரவுகள் என்னென்ன? பட்ஜெட்டில் இதற்காக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டது எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இப்படியான சட்டம் வந்தால் கார்களின் விலை உயரும் குறிப்பாக இரண்டாவதாக கார் வாங்குபவர்கள் வாங்கத் தயக்கம் காட்டுவார்கள். கார்களின் விற்பனையில் பெரிய சரிவு ஏற்படும். ஆனால் மாசு கட்டுப்படுத்தப்படும், மக்கள் அதிகம் பொது போக்குவரத்தை விரும்பத் துவங்கிவிடுவார்கள். இந்த வழக்கு குறித்த உங்கள் கருத்து என்ன கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sc plea seeking to amend one car one person scheme in India know the verdict
Story first published: Monday, January 23, 2023, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X